close
Choose your channels

உடல்நிலை தேறியவுடன் பரவை முனியம்மா பார்த்த முதல் படம் 

Saturday, February 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் கிராமப்புற பாடல்கள் பாடும் பாடகியுமான பரவை முனியம்மா கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்பதும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தது என்பதும் தெரிந்ததே. பின்னர் திரையுலகில் இருந்த சிலரின் உதவியால் அவருக்கு சிறந்த மருத்துவ வசதி கிடைத்து தற்போது அவர் உடல்நிலை தேறி உள்ளார்

இந்த நிலையில் உடல்நிலை தேறிய உடனே அவர் தனது மருத்துவ சிகிச்சைக்கு பெரும் உதவி செய்த நடிகர் அபி சரவணன் நடித்த படத்தை அவர் முதல்முறையாக பார்த்துள்ளார். அபி சரவணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’மாயநதி’ என்ற திரைப்படம் அனைவரின் பாராட்டை பெற்ற நிலையில் இந்த படத்தை பரவை முனியம்மா அவர்கள் மதுரையில் தனது குடும்பத்தினருடன் பார்த்தார்.

நீண்ட நாள் கழித்து தியேட்டரில் படத்தைப் பார்த்த அனுபவம் தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மாயநதி படத்தில் அபிசரவணன் வெகு சிறப்பாக நடித்து உள்ளதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.