கொரோனாவுக்கு பலியான 9 மாத குழந்தையின் உடலை வாங்க மறுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனது ஒன்பது மாத குழந்தை திடீரென உயிரிழந்ததை அடுத்து அந்த குழந்தையின் உடலை வாங்க அக்குழந்தையின் தந்தை மறுத்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரது 9 மாத குழந்தை திடீரென கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்த குழந்தை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 26ஆம் தேதி அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரிகிறது

இந்த நிலையில் குழந்தையின் உடலை கேட்டு கடந்த 3 நாட்களாக அக்குழந்தையின் தந்தை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் கொரோனாவால் இறந்த குழந்தையின் உடலை ஒப்படைப்பதில் பல்வேறு நடைமுறைகள் இருந்ததால் மருத்துவமனை நிர்வாகம் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது

இந்த நிலையில் தற்போது குழந்தையின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள் என மருத்துவர் மருத்துவமனை நிர்வாகம் அக்குழந்தையின் தந்தையிடம் கூறிய போது அந்த குழந்தை உடலை வாங்க தந்தை மறுத்து விட்டார். தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்திருப்பதாகவும் கடந்த 3 நாட்களாக தான் கொண்டு வந்த பணம் முழுவதும் செலவாகி விட்டதால் தற்போது குழந்தையின் உடலை வாங்கிக் கொண்டு இறுதி சடங்கு செய்யவோ அல்லது உடலை உத்தரப்பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லவோ தன்னிடம் பணம் இல்லை என்றும் அதனால் குழந்தையின் உடலை மருத்துவமனை நிர்வாகமே இறுதி சடங்கு செய்து விடும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது