'ஆஸ்கார்' விருது வாங்க செலவு செய்யணுமா? நெட்டிசன் கேள்விக்கு பார்த்திபன் பதில்!

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

திரைத் துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? என நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இயக்குனர் பார்த்திபன் அளித்துள்ள பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று ஆஸ்கர் விருதை பெற தகுதி பெற்ற திரைப்படங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது என்பதும் இதில் 93 திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளது என்பதும் இந்தியாவில் இருந்து ஆஸ்கர் விருதுக்கு தேர்வான ஒரே திரைப்படம் ‘ஜல்லிக்கட்டு’ என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றை நேற்று நெட்டிசன் எழுப்பியபோது இந்த லிஸ்டில் உங்களுடைய படமும் இருக்க வாழ்த்துக்கள் என்று ‘ஒத்த செருப்பு’ படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு தெரிவித்துள்ளார். அதற்கு பார்த்திபன் ’இருந்தால் மகிழ்ச்சிஇல்லையேல் அடுத்ததில் முயல்வேன். உள்ளூரிலேயே இவ்வளவு ... அது வெளிநாடுஆயிரம் இருக்கும், அதற்கு செலவு செய்யவும் என்னால் இயலவில்லை’ என்று பதிவு செய்துள்ளார்

இந்த பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் ’ஆஸ்கார் விருது வாங்க செலவு செய்யனுமா? புரியல சார் என்ன சொல்ல வரீங்க? என்று கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இந்த கேள்விக்கு பதிலளித்த பார்த்திபன், ‘விசாரித்து பாருங்கள் விசாரணை படத்துக்கு மூன்றரை கோடி செலவு செய்தார்கள், அப்படி செலவு செய்தால்தான் நாமினேஷன் ஆவது கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்

உண்மையில் ஆஸ்கார் விருது பட்டியலில் இடம்பெறவும், அந்த விருதுக்காக தேர்வு செய்யப்படும் படத்தின் காட்சிகளை ஜட்ஜ்களுக்கு விளக்கவும் பல கோடி செலவாகும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்த திரைப்படம் ஒன்று மலையாளத்தில் வெளிவந்து உள்ளதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றார்கள்.

சிவாஜி கணேசனின் ‘தெய்வ மகன்’, கமல்ஹாசனின் ‘ஹே ராம்’ உள்பட பல திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்காமல் போனதற்கு காரணம் அந்த படத்தின் பல காட்சிகளை ஜட்ஜ்களுக்கு புரிய வைக்க முடியாமல் போனது தான் என்றும் கூறப்படுகிறது
 

More News

ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஹாலிவுட் நடிகையின் கேரக்டர் குறித்த அறிவிப்பு!

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும்

இணையத்தில் வைரலாகும் இயக்குனர் அகத்தியனின் குடும்ப புகைப்படங்கள்!

தமிழ் திரையுலகில் முதன் முதலாக இயக்குனருக்கான தேசிய விருதை பெற்ற பெருமை இயக்குனர் அகத்தியனுக்கு உண்டு. அஜித், தேவயானி நடித்த 'காதல் கோட்டை' என்ற திரைப்படத்தை இயக்கியதற்காக அவருக்கு

'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்புக்கு வந்த பிரபல நடிகர்களின் மனைவிகள்!

பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கிவரும் 'பொன்னியின் செல்வன்' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பினால் ஆண்மை குறைபாடு வருமா? அதிர்ச்சி தகவல்!

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களின் விந்துவில் கொரோனா வைரஸ் மரபணு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதிப் படுத்தினர்.

சினிமாவாகும் புகழ்பெற்ற நாவல்: சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்!

தமிழ் சினிமாவில் நாவல்களை வைத்து படம் எடுக்கும் வழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிவாஜி கணேசன் நடித்த 'தில்லானா மோகனாம்பாள்' முதல் சமீபத்தில் வெளிவந்த 'அசுரன்' வரை