பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? இளையராஜா குறித்து பார்த்திபன்

  • IndiaGlitz, [Wednesday,June 02 2021]

இன்று இசைஞானி இளையராஜா பிறந்த நாள் கொண்டாடப்படும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் இசைஞானிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் ’அவரை என்ன சொல்லி வாழ்த்த’ என டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

பத்திரிகையாளர் கவிதா இசையராசா குறித்து Skype-ல் சில வார்த்தைகள் பேச முடியுமா என்றார். SKY-ஐப் பற்றி Skype-ல் பேசித் தீருமா என்றேன். கண்ணுக்குள் கண்டுவிடும் பரப்பில்லை வானம். கண்டதையெல்லாம் ஒப்புக்கொள்வதுமில்லை நம் மனம். என் ஞானத்திற்குள் அகப்படாத பெரும்பொருள் இசைஞானி.

தரை மார்க்கமாக மாநிலங்கள் கடக்கலாம், கடல் மார்க்கமாக அண்டை நாடுகள் கடக்கலாம், ஆகாய மார்க்கமாக கண்டங்கள் கடக்கலாம், ஆனால் பக்தி மார்க்கமாகவே மாய சக்திகள் உணரலாம். உணராத ஒரு சக்தியை நான் பக்தியோடு பார்க்கிறேன், அப்படியாவது அறிய முடிகிறதா என ஆராய்கிறேன். அப்படி என் ஆராதனைக்குரியவர் பெரியவர் திரு இளையராஜா அவர்கள்.

(பக்தி= அகம் நோக்கி ஊர்தல்) பிறந்த பயனையே அவரின் இசையால் அடைந்தவன், பிறந்த நாளில் அவரை என்ன சொல்லி வாழ்த்த? ஆனாலும் ஏதேதோ சொல்ல முற்பட்டேனே... அதுதான் அறியாமை என்பது’ என்று பதிவு செய்துள்ளார்.

More News

ஒரு கோடிக்கும் மேல் கொரோனா நிவாரண நிதி கொடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் தமிழக அரசு எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.

வித்தியாசமான முறை.....! ஆக்சிஜனுக்காக நிதி திரட்டிய யுடியூபர்ஸ்....!

பிரபலமான யுடியூபர்கள்  இணைந்து,  ஆக்சிஜன் உற்பத்தி  மையத்திற்காக  நிதி திரட்டிய சம்பவம்

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்தானது ....! பிரதமர் அறிவிப்பு....!

கொரோனா தொற்று காரணமாக சென்ற மாதம் ஏப்ரல்- 14-ஆம், நடைபெறவிருந்த சிபிஎஸ்இ  தேர்வுகள் ரத்துசெய்யப்பட்டு இருந்தது

ஜூன் 3,13, 23 நாட்கள்.... திமுக vs அதிமுக... தமிழக அரசியலில் நடக்கப்போகும் புதிய மாற்றங்கள் என்ன ...!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக கட்சிகளில் முக்கிய நிகழ்வுகள் நடக்கவுள்ளன.

உருமாறிய புது பறவைக் காய்ச்சலால் பாதிப்பு… தொடரும் அதிர்ச்சி!

சீனாவில் உருமாறிய புது பறவைக் காய்ச்சல் வைரஸால் முதல் முறையாக ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.