காட்சிகள், பின்னணி இசையில் மிரட்டும் 'இரவின் நிழல்' டீசர்!

பார்த்திபன் நடித்து இயக்கிய ‘இரவின் நிழல்’ என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகின் முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்ற ‘இரவின் நிழல்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பார்த்திபன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டு உள்ளனர்.

இந்த டீசரின் ஆரம்பத்தில் பார்த்திபன் தன்னுடன் 5 நபர்களை அறிமுகப்படுத்தி அந்த 5 பேரும் நானே என்று கூறியுள்ள முதல் காட்சியே வித்தியாசமாக உள்ளது. மேலும் ஒன்றரை நிமிடடீசரில் உலகத்தரத்திலான மிரட்டும் காட்சிகள், இசைப்புயல் ஏஆர் ரகுமானின் அபார பின்னணி இசை ஆகியவை இந்த படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகப்பெரிய அளவில் ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் படத்தை வெளியிடுங்கள் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .

பார்த்திபன், வரலட்சுமி சரத்குமார், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.

More News

தமிழக முதல்வர் மனைவியிடம் இருந்து விருது வாங்கிய தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களிடம் இருந்து தமிழ் நடிகை ஒருவர் 'பவர் ஆப் வுமன்' என்ற விருதைப் பெற்றுள்ள நிலையில் இது குறித்த

ஏ.ஆர்.ரஹ்மான் முன் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: வைரல் வீடியோ

மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த இயக்குனர் பார்த்திபன் ஏஆர் ரகுமான் முன்பே மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி விஜய்யின் 'பிகில்' பட நடிகைக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பிகில்' படத்தில் நடித்த நடிகை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கார்த்திக் நரேனின் அடுத்த படம் ரெடி: ரிலீஸ் எப்போது?

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய 'மாறன்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

1000 கோடியுடன் இந்த 350 கோடியையும் சேர்த்துக்கோங்க: 'கே.ஜி.எப் 2' வசூல் ராக்கிங்!

யாஷ் நடிப்பில் உருவான 'கேஜிஎப் 2' திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு மேலும் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ள தகவல்