உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது.. வைரலாகும் கமல்ஹாசன் ஆடியோ..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்குது என்ற கமல்ஹாசன் ஆடியோவை நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.

பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு நயன்தாரா நடித்த ’கோல்டு’ என்ற படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது

இந்த நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடிக்கும் படத்தை இயக்கி அவர் இயக்கி வந்த நிலையில் திடீரென தான் சினிமாவை விட்டு விலகப் போவதாகவும் தனக்கு உடல் நல குறைவு இருப்பதால் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறி இருந்தார்.
இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் கமல்ஹாசன் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் புத்திரன் ஒரு பாடலை அவரே பாடி ஆடியோவாக உருவாக்கி இருந்தார். ஆனால் அந்த ஆடியோவை எப்படி கமல்ஹாசனிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று தெரியவில்லை.

இதையடுத்து அவர் அந்த ஆடியோவை இயக்குனர் பார்த்திபனுக்கு அனுப்பிய நிலையில் பார்த்திபன் கமல்ஹாசனுக்கு அனுப்பினார். அந்த பாடலை கேட்ட கமல்ஹாசன் பதிலுக்கு ஒரு ஆடியோவை பார்த்திபனுக்கு அனுப்பி உள்ளார்

அந்த ஆடியோவில் ’அல்போன்ஸ் புத்திரன் உடம்பு சுகம் இல்லை என்றாலும் மனசு நன்றாக இருக்கிறது. குரல் சந்தோஷமாக இருக்கிறது. அப்படியே சந்தோஷமா அவர் இருக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவு கூட அவருடையது என்றாலும் உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள் டேக் கேர் அல்போன்ஸ், என்று கூறியிருந்தார்,.

More News

சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் உரிமையை வாங்கிய சூர்யா? அடுத்த படம் இதுதானா?

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகர் சூர்யா வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது  

ஜெயிலுக்கு போக முடியாது... விசித்ராவின் முடிவை அடுத்து கேப்டன் எடுத்த அதிரடி முடிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் விசித்ரா மற்றும் அர்ச்சனா ஆகிய இருவரும் மோசமாக விளையாடியதாகவும், இதனை அடுத்து இருவரும் ஜெயிலுக்கு போக வேண்டும் என்றும் அனைத்து

மகளின் 12வது பிறந்த நாள்.. ஐஸ்வர்யா ராயின் நெகிழ்ச்சியான வாழ்த்து: அசத்தல் புகைப்படங்கள்..!

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யாவின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகளுக்கு நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்துக்களை  இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு

நடிப்புக்கு முழுக்கு போட்டு  விட்டாரா அதிதி ஷங்கர்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் நடிகை அதிதி ஷங்கர், கார்த்தி நடித்த 'விருமன்'  என்ற திரைப்படத்தில் அறிமுகமான நிலையில் அதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்த 'மாவீரன்' திரைப்படத்தில் நடித்தார்.

ரஜினி, கமல் கலந்து கொள்ளும் பிரமாண்டமான விழா.. நேரில் கொடுக்கப்பட்ட அழைப்பு..!

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.