கூவத்தூர் எம்.எல்.ஏக்கள் சொல்லி கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள். பார்த்திபன்

  • IndiaGlitz, [Friday,February 17 2017]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு என கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருக்கும் எம்.எல்.ஏக்களில் ஒருசிலர் தொலைக்காட்சியில் பேட்டி அளித்து வருகின்றனர். இதுகுறித்தும் இன்றைய அரசியல் சூழல் குறித்தும் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:

கூவத்தூரில் பக்கம் நான் போனேன். அந்தப் பக்கம் இருந்த மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினார்கள். இந்த பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசாங்கம் அமைப்பது சரியா?

கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப்பிள்ளை என்று அர்த்தம்' என்று கூறியுள்ளார்.

மேலும் சுப்ரீம் தீர்ப்பின்படி ஜெயலலிதாவும் குற்றவாளிதான். எடப்பாடி பழனிச்சாமியும், ஓ,பன்னீர்செல்வமும் அவர் கை காட்டியவர்தான். ஒரு குற்றவாளி கைகாட்டியவர்கள் நமக்கு முதல்வராக வேண்டாம்.

இந்த பிரச்சனைக்கு மறுதேர்தல்தான் சரியான வழி. மறுதேர்தலால்தான் மெரீனாவில் ஏற்பட்டது போன்ற புரட்சி ஏற்படும். மறுதேர்தலால் மக்கள் பணம் வீணாகும் என்று சிலர் சொல்லலாம். ஆனால் கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்களின் பாதுகாப்புக்காக செலவிடப்படும் பணமும் வீண் தானே' என்று பார்த்திபன் கூறியுள்ளார்.

More News

குண்டர் சட்டத்தில் ஒரு மாதம் சிறையில் அடையுங்கள். முதல்வருக்கு சுப்பிரமணியன்சுவாமி கோரிக்கை

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழர்களை பொறுக்கி என்று கூறி வாங்கிக்கட்டி கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் சசிகலாவைத்தான் முதல்வர் பதவியேற்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று கூறி சர்ச்சையை கிளப்பியதோடு, கவர்னருக்கு எதிராக வழக்கு தொடுப்பேன் என்றும் அறிவித்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.

அரசியலில் நுழைய இதுதான் சரியான நேரமா? என்ன முடிவெடுப்பார் இளையதளபதி?

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படங்களை அடுத்து மிகச்சிறப்பான ஓப்பனிங் வசூல் மற்றும் வெளிநாட்டு வசூல் என்றால் அது இளையதளபதி விஜய் படத்திற்குத்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர். திருவிழா நாளாக இல்லாமல் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும் நாளை அவரது ரசிகர்கள் திருவிழாவாக மாற்றிவிடுவார்கள்...

சபாநாயகருடன் ஓபிஎஸ் அணியினர் திடீர் சந்திப்பு

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி தனது ஆட்சிக்கு நாளை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெட்டுப்பு கோர உள்ளார். பொதுவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் சபாநாயகரின் ரோல் மிகவும் முக்கியம். அவர் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொண்டால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு சரியாக நடக்கும்...

அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன் நீக்கம். அதிரடி நடவடிக்கை

தமிழகத்தின் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்று கடந்த சில நாட்களாக சசிகலா தரப்பு அணிக்கும், ஓபிஎஸ் தரப்பு அணிக்கும் போட்டி இருந்த நிலையில் நேற்று சசிகலா ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக நீடிப்பது நாளை நடக்கவுள&#

என்னை பார்த்து சிரிக்க வேண்டாம். முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தமிழகத்தின் முதல்வராக நேற்று பதவியேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்...