திரையுலகிற்கு வருகிறார் பார்த்திபன் மகன்.. ஹீரோவா? இயக்குனரா? அவரே அளித்த விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இயக்குநர் பார்த்திபனின் மகள், ஏற்கனவே திரைத்துறையில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது அவரது மகனும் சினிமா உலகிற்கு வரவிருப்பதாக பார்த்திபன் அறிவித்துள்ளார்.
பார்த்திபன் மகள் கீர்த்தனா, மணிரத்னம் இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். மேலும், மணிரத்னம் இயக்கிய 'செக்கச்சிவந்த வானம்', 'காற்று வெளியிடை' போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். 'ஒத்த செருப்பு', 'இரவின் நிழல்' ஆகிய படங்களையும் தயாரித்திருந்தார். விரைவில் அவர் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பார்த்திபனின் மகன் ராக்கி விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாக பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
ராக்கி பார்த்திபன் !
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து தெளிந்த திரை ஞானம், திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்க காத்திருக்கிறார் .விரைவில் அறிவிப்பு வர நானும் அவரோடு ஆவலோடு காத்திருக்கிறேன்.
அப்படத்தில் நடிக்க எனக்கும் ஒரு வாய்ப்பளிப்பதாக வாக்களித்திருக்கிறார். அது என் பிறவிப் பயன். என்னை போல அவர் அதிகம் பேச மாட்டார். என்னிமே அளவாய் தான் பேசுவார். வாழ்க்கையை அவர் பார்க்கும் பார்வையும் ரசனையும் class apart ! அப்பாவை விட என்று இணைத்து எழுதுவதில் பொறாமை கலந்த பெருமை எனக்கு. அவர் வாழ்வில் வெற்றி சூடும் நாளே எனக்கு சிறந்த நாள்!
ராக்கி பார்த்திபன் !
— Radhakrishnan Parthiban (@rparthiepan) June 14, 2025
என் மகன்
என் உயிருக்கு நிகர்.
கருப்பு வெள்ளை படங்களிலிருந்து பார்த்து பார்த்து
தெளிந்தத் திரை ஞானம்,திரு ஏகாவிடம் ஒளிப்பதிவும், இயக்குனர் விஜய் அவர்களிடம் இயக்கமும் கற்று ஒரு கமர்ஷியல் திரில்லர் படத்திற்கான கதை திரைக்கதையை உருவாக்கி இயக்கக் காத்திருக்கிறார்… pic.twitter.com/GMUEcMEEAb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments