கே.பாக்யராஜூக்கு பார்த்திபன் நடத்தும் 'திரைபாக்கியம்' விழா

  • IndiaGlitz, [Saturday,November 26 2016]

கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்த பார்த்திபன் தற்போது 'கோடிட்ட இடங்களை நிரப்புக' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை தனது குருநாதர் கே.பாக்யராஜுக்கு செய்யும் மரியாதையாக 'திரைபாக்கியம்' என்ற பெயரில் நடத்த உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திரையுலகில் தனது திறமையால், எழுத்தால், உழைப்பால் இன்னும் சாதனைகள் புரிந்து வரும், பலரது மற்றும் எனது குருவாய் வாய்த்த மதிப்பிக்குரிய இயக்குனர் K.பாக்யராஜ் அவர்களின் திரைச் சாதனைகளுக்கு மரியாதை புரியும் வகையில்,
நம் திரைத்துறை அன்பர்கள் - திரைச் சங்கங்கள் - கலை -இலக்கிய - ஊடக நண்பர்களின் சார்பாக ஒரு சந்தோஷ நிகழ்வு நிகழ்த்த விரும்புகிறேன்.
உரிய சமயத்தில், ஒரு உயரிய கலைஞனை கவுரவிக்கும் அழகான மேடை அது. இவ்விழவை, தங்கள் வருகையும், வாழ்த்தும், ஈடுபாடும் இன்னும் மெருகேற்றும். அர்த்தமுள்ளதாக்கும். சங்க உறுப்பினர்களின் வருகையும் சந்தோஷப்படுத்தும்
நம் எல்லோரின் அன்பையும் வெளிப்படுத்த நான் முன்னெடுக்கும் இச்சிறு முயற்சிக்கு உங்கள் இனிய ஒத்துழைப்பு வேண்டும்.
இவ்விழா நிகழ்வோடு ஒட்டிக்கொண்டு நிகழும் எனது, 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரை இசைப் பாடல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியையும், வாழ்த்தி மகிழ்ச்சிப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

More News

முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ காலமானார்

கியூபா நாட்டின் முன்னாள் அதிபரும், கம்யூனிஸ்ட் புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார். அவருக்கு வயது 90

டண்டனக்காவை அடுத்து 'டமாலு டுமீலு'. அனிருத்தின் அடுத்த பாடல்

இளம் இசைப்புயல் அனிருத், இசையமைப்பது மட்டுமின்றி மற்ற இசையமைப்ப&

விஜய் பாடிய 'பைரவா' பாடல். சந்தோஷ் நாராயணன் தரும் முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'பைரவா' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது இரவுபகலாக போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.

வறுமையில் வாடிய ரஜினி பட இசையமைப்பாளரின் குடும்பத்திற்கு விஷால் உதவி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'மனிதன்', ராஜா சின்ன ரோஜா, போன்ற படங்கள் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மறைந்த சந்திரபோஸ் அவர்களின் குடும்பம்...

சூர்யா-விக்னேஷ்சிவன் படத்தில் இணைந்த பழம்பெரும் காமெடி நடிகர்

'எஸ் 3' படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.