மாம்பழமா? மாபெரும் பழமா? யாருக்கு ஓட்டு குறித்து பார்த்திபன் பதிவு
தமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிகிறது. தேர்தலுக்கு அரசியல்வாதிகள் தயாராகிவிட்டாலும் நடுநிலை வாக்காளர்கள் பலர் யாருக்கு வாக்களிப்பது என்று இன்னும் தயாராகவில்லை போல் தெரிகிறது.
இந்த நிலையில் யாருக்கு வாக்களிக்கலாம் என்பது குறித்து நடிகரும் இயக்குனருமான ஆர்.பார்த்திபன் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
மாம்பழமோ? மாபெரும் பழமோ?
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகளுக்கு,
தேர்தல்=தேத்துதல்(பணம்)
வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள் அதுகூட திமிங்கல வேட்டைக்கே.காசு வாங்காமல் ஓட்டு போடுவோம்-மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு
வழக்கம்போல் பார்த்திபனின் இந்த பதிவுக்கும் நெட்டிசன்களிடன் இருந்து ஆதரவு, எதிர்ப்பு கருத்துக்கள் பதிவாகி வருகிறது.
மாம்பழமோ? மாபெரும் பழமோ?
— R.Parthiban (@rparthiepan) April 16, 2019