மூன்றெழுத்துக்காரரின் 75 நாள் மௌனத்தின் மாமர்மம். பார்த்திபனின் அரசியல் கவிதை

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசியல் சூழ்நிலை குறித்து அரசியல்வாதிகள் மட்டுமின்றி கமல்ஹாசன், விசு, கங்கை அமரன் போன்ற திரையுலகினர்களும் தைரியமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர், இயக்குனர் பார்த்திபன் அவர்களும் இன்றைய அரசியல் சூழ்நிலையை கவிதை வடிவில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த கவிதையில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:
முதன்முறையாக ... மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல... ஜீரணிக்க !
மரணத்தின் மர்மம்,
மூன்ரெழுத்துக்காரரின் 75 நாள்
மௌனத்தின் மாமர்மம்,
அரசியல் அதர்மங்கள்,
ரிசார்ட்டில் Mla-க்கள்,
ரிமோட்டாய் கோடிகள்,
நடப்பவை நடந்தவை....
விளங்காமல் கலங்கரை
விளக்கத்திலிருந்து நடந்து
சென்றேன். கட்சிகளின்
கல்மிஷங்கள் இல்லாத
Mgr-ன் விசுவாசிகள்,
அதிமுக தொண்டர்கள்,
அறியா பொதுஜனங்கள்
அணையா தீபங்களாய்
அங்கே ஒளியூட்டல் !
அம்மா'என்றழைக்கப்பட்டவரின்
ஆன்மா என்ன நினைக்கும் ?
எனக்கும் அவருக்குமான சில
சந்திப்புகளும் சம்பாஷைனைகளும்
வந்து போயின நினைவில்!
நம்பிக்கை துரோகமும்
துரோகிகளின் நம்பிக்கையும்
எதுவுமே சகிக்கல!
திருமதி சசிகலாவோ
திருமிகு OPS-ஸோ
ஆட்சியமைப்பது
சட்ட பூர்வமேயாகையால்
சட்டு புட்டுன்னு
சட்டசபைக்கு வந்து
மக்கள் பணி பாருங்கள்!
எம்மக்கள் திருந்திவிட்டார்கள்!!!
மறுதேர்தலை சந்திக்க வாருங்கள் !
நோட்டுக்காக அல்ல
நாட்டுக்காகவே ஓட்டு!

More News

ஓரளவுக்குத்தான் பொறுமை. அதற்கு மேல் செய்ய வேண்டிதை செய்வோம். சசிகலா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மங்கிக்கொண்டே வருவதாக கூறப்படும் நிலையில்...

ஓபிஎஸ்- மாஃபா பாண்டியராஜன் சந்திப்பு. நேரில் ஆதரவு தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இதுவரை எம்.எல்.ஏக்கள் மட்டும் ஆதரவு கொடுத்து வந்த நிலையில் அவருக்கு ஆதரவு கொடுக்கும் முதல் கேபினட் அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் தனது ஆதரவை தெரிவித்தார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

போயஸ் கார்டன் இல்லத்தை 24 மணி நேரத்தில் கைப்பற்ற வேண்டும். பிரபல அரசியல் கட்சி தலைவர்

தமிழக ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை சந்தித்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகியும் சசிகலாவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

சசிகலாவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம். ஓபிஎஸ்-இன் அடுத்த அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து கொண்டு வரும் நிலையில் அதிமுகவை கைப்பற்றுவது, ஆட்சி அமைப்பது மட்டுமின்றி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை சசிகலாவிடம் இருந்து மீட்டு நினைவு இல்லம் அமைக்க வேண்டும் என்பதும் அவரது கடமைகளில் ஒன்றாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்...

கூவத்தூர் விடுதியில் நடப்பது என்ன? காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் பேட்டி

கூவத்தூர் விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதாகவும், சுய விருப்பத்தின் பேரிலேயே விடுதியில் அவர்கள் தங்கியிருந்ததாக தெரிவித்ததாகவும், தங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அங்கு தங்கியிருந்த எம்.எல்.ஏக்கள் தெரிவித்ததாகவும் காஞ்சிபுரம் ஏ.டி.எஸ்.பி. தமிழ்செல்வன் சற்று முன்னர் பேட்டியளித&#