தங்கலான் படம்… ரொம்பவே விறுவிறுப்பான தகவலைப் பகிர்ந்த நடிகை பார்வதி!

  • IndiaGlitz, [Saturday,March 11 2023]

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் “தங்கலான்” திரைப்படத்தில் இணைந்து நடித்துவரும் நடிகை பார்வதி இப்படத்தில் தனது அனுபவம் குறித்து முதல்முறையாகக் கருத்துப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் வரவேற்பு பெற்ற நடிகையான நடிகை பார்வதி, இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படமான “பூ” படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷுடன் “மரியான்” போன்று ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தவர் தற்போது 13 வருடங்களுக்குப் பிறகு தமிழ் மொழி திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சியான் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோருடன் இணைந்து தங்கலான் திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை பார்வதி, இப்படத்திற்காகத் தனது உடல் எடையைக் குறைத்து அதிக மெனக்கெடலுடன் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தில் நடித்த தனது அனுபவம் குறித்து சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை பார்வதி, தங்கலான் படத்திற்காக நடித்தது போல் ஒரு நடிகையாக இதுவரை ஒரு மெனக்கெடல் நிறைந்த படத்தில் நடித்ததில்லை என்று கூறியுள்ளார். மேலும் திரைப்படம் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்த அவர், ஆரம்ப காலங்களில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. தியேட்டர்களில் படத்தைப் பார்க்கும்போது ரசிகர்கள் பிரம்மாண்டமாக உணர்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு பா.ரஞ்சித் இயக்கிவரும் இந்தப் படத்தில் பிரிட்டிஷ் நடிகர் டான் கால்டஜிரோனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் பல உண்மைச் சம்பங்கள் இந்தப் படத்தில் காட்சிகளாக இடம்பெறும் எனக் கூறப்படும் நிலையில் தங்கலான் திரைப்படம் குறித்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆத்திரத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த ரொனால்டோ… வைரலாகும் காட்சிகள்!

நட்சத்திர கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது அணி தோல்வியடைந்ததும் கோபத்தில் தண்ணீர் பாட்டில்களை எட்டி உதைத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

இன்பநிதி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த உதயநிதி.. பிரத்யேக பேட்டி..!

நடிகர் தயாரிப்பாளர் மற்றும் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இன்ப நிதியின் புகைப்படம் வெளியாகி ஏற்படுத்திய சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசி

'காத்துவாக்குல ரெண்டு காதல்': 2 பெண்களுடன் ஒரே நாளில் திருமண செய்த இளைஞர்..!

 தெலுங்கானா மாநிலத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் ஒரே நாளில் இரண்டு பெண்களுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்ட சம்பவம் காத்து வாக்குல ரெண்டு காதல் என நெட்டிசன்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

டிஜே பிளாக்கின் அடுத்தகட்ட வளர்ச்சி.. மாகாபா, ப்ரியங்கா நேரில் வாழ்த்து..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உட்பட பல நிகழ்ச்சிகளில் டிஜே பிளாக்கின் பணி மிகவும் சிறந்தது என்பதும் அவருக்கு ஏராளமான பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன என்பது

விஜய்யின் 'லியோ' படத்தின் மாஸ் அப்டேட்.. படக்குழு வெளியிட்ட வீடியோ..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் 'லியோ' படத்தின் தொடர் அப்டேட் விரைவில் வெளிவரும் என்று