விமான நிலையத்தில் பயணிகள் முன் சிறுநீர் கழித்த நபர்: வைரலாகும் வீடியோ!

  • IndiaGlitz, [Friday,January 03 2020]

விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் பல பயணிகள் முன்னிலையில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து விமான நிலையங்களிலும் கழிப்பறை வசதி இருந்து வரும் நிலையில் விமான பயணி ஒருவர் காத்திருக்கும் அறையில்நாற்காலியில் உட்கார்ந்துகொண்டேன் சிறுநீர் கழித்த வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Passenger Shaming என்ற ஒரு பக்கத்தை உருவாக்கி இந்த வீடியோவை சக பயணி ஒருவர் பதிவு செய்துள்ளார்.

மேலும் பலர் முன்னிலையில் அவர் சிறுநிர் கழித்து கொண்டிருப்பதை மற்ற பயணிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், ஒருவர் கூட அதனை தட்டிக் கேட்கவோ அல்லது தடுக்கும் முயற்சியிலோ ஈடுபடவில்லை என்றும் இந்த வீடியோவிற்கு கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

அந்த பயணி மனநிலை சரியாக சரியில்லாதவராக இருக்க வேண்டும் என்றும் அல்லது வேண்டுமென்றே சக பயணிகளை வெறுப்பேற்றும் நோக்கில் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்றும் கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. இருப்பினும் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொண்ட இந்த பயணிக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

50 வருடம் கழித்து, படித்த பள்ளியில் பழைய நண்பர்களை சந்தித்த ஸ்டாலின்..!

தன்னுடன் பள்ளியில் படித்த பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்ந்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்.

மீண்டும் இணைகிறதா சர்கார் கூட்டணி?

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி விஜயின் 64 வது படமான 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

'தர்பார்' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத்தின் இசையில்

தமிழ்நாட்டின் 'CM விஜய்'...போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள்..!

தமிழ்நாட்டின் CM விஜய் என ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பத்தே பத்து ஓட்டு மட்டுமே வாங்கி பஞ்சாயத்து தலைவி ஆன பெண்: எப்படி தெரியுமா?

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் 27, 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு