இயக்குனர் கிருஷ்ணாவின் அடுத்த படத்தின் முக்கிய தகவல்.. அப்ப 'பத்து தல 2' என்ன ஆச்சு?

  • IndiaGlitz, [Friday,May 05 2023]

சிம்பு நடித்த ‘பத்து தல ’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கிருஷ்ணா இயக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான குளோபல் ஒன் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் கிருஷ்ணா இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ’ராமன் தேடிய சீதை’ ’சாருலதா’, ‘அலோன்’, ‘ஹேய் சினாமிகா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தை கிருஷ்ணா இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இயக்குனர் கிருஷ்ணா கூறுகையில், ‘குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்குவதில் நான் பெருமை அடைகிறேன், இந்த படத்திற்கான கதை விவாதங்கள் முடிந்து விட்டது, விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும்’ என்று கூறியுள்ளார்

அதேபோல் குளோபல் ஒன் ஸ்டுடியோ நிறுவனத்தின் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறிய போது ’எங்கள் நிறுவனத்தின் அடுத்த படத்தை கிருஷ்ணா இயக்க உள்ளதை அறிவிப்பதில் நாங்கள் பெருமை அடைகிறோம், இந்த படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். கிருஷ்ணாவின் அடுத்த பட அறிவிப்பு வெளியானதை அடுத்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்த ‘பத்து தல’ திரைப்படத்தின் கிளைமாக்ஸில் இரண்டாம் பாகம் உருவாகும் என முடித்துள்ள கிருஷ்ணா, தற்போது வேறு படத்தை இயக்கவிருப்பதை அடுத்து ‘பத்து தல 2’ எப்போது? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More News

செல்வராகவன் மகள் இவ்வளவு வளர்ந்துவிட்டாரா? க்யூட் குடும்ப புகைப்படம்..!

இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளத்தில் குடும்ப புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் உள்ள அவரது மகளை பார்த்து செல்வராகவன் மகள் இவ்வளவு வளர்ந்து

'தளபதி 68' பட இயக்குனர் இவர்தானா..? அப்ப அட்லி, கார்த்திக் சுப்புராஜ் என்ன ஆச்சு?

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திடீரென 'தளபதி 68' படத்தின் இயக்குனர் குறித்த ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயம் ரவியின் 'இறைவன்' ரிலீஸ் தேதி இதுவா? சிவகார்த்திகேயனுடன் மோதலா..?

ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள அடுத்த திரைப்படமான 'இறைவன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் கசிந்துள்ள நிலையில் அநேகமாக 'இறைவன்' மற்றும் 'மாவீரன்' ஆகிய இரண்டு

நம்ம ஷிவானி நாராயணனுக்கு பிறந்த நாள்… இன்ஸ்டாவில் வாழ்த்தும் ரசிகர்கள்!

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டு பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன்.

லைவ் வீடியோவில் கண்ணீர் சிந்திய 'அந்நியன்' பட நடிகை சதா… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

அண்டங்காக்கா கொண்டக்காரி எனும் அந்நியன் பாடலுக்கு உற்சாகமான நடனத்தைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம்பிடித்துக் கொண்டவர்தான் நடிகை சதா.