'ஓ சொல்றியா மாமா' பாடலுக்கு இணையான கிளாமர்.. சாயிஷாவின் 'பத்து தல'  பாடல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,March 25 2023]

அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஓ சொல்றியா மாமா’ என்ற பாடலில் உச்சகட்ட கிளாமர் காஸ்ட்யூம் உடன் சமந்தா நடனம் ஆடி இருப்பார் என்பதும் அந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த பாடலுக்கு இணையாக நடிகை சாயிஷா ’பத்து தல’ திரைப்படத்தில் நடனமாடிய வீடியோ சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சிம்பு நடிப்பில் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்

‘ராவடி’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு நடிகை சாயிஷா அட்டகாசமாக நடனமாடி உள்ளார் என்பதும் கிளாமர் உடையில் அவரது நடனம் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாடலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முத்துக்குமாரும் இடம் பெற்றுள்ளார். சினேகன் பாடல் வரிகளில் சுபா மற்றும் நிவாஸ் குரலில் உருவான இந்த பாடலை இசைப்புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

More News

அஜித்-விஜய் சந்திப்பு நடந்தும் ஒரு புகைப்படம் கூட வெளியாகவில்லை.. காரணம் இதுதானா?

பொதுவாக விஜய் ஒரு சிறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் கூட அதன் புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் அஜித்துடன் விஜய் சந்தித்த முக்கிய நிகழ்வு

தனுஷ் படம் குறித்து எச்.வினோத் கூறிய மாஸ் தகவல்.. 'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகமா?

 எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் அக்ஷய் குமாருக்கு காயம் !

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சண்டை காட்சி ஒன்றில் நடித்தபோது விபத்துக்குள்ளாகி முழங்காலில் காயம்

விஜயகாந்த் மகன் ஹீரோ, அனுராக் காஷ்யப் வில்லன்.. 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்குனராகும் பிரபலம்..!

 13 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குனராகும் பிரபலம் ஒருவர் விஜயகாந்த் மகன் ஹீரோவாகவும் அனுராக் காஷ்யப் வில்லனாகவும் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

சிம்புவின் 'பத்து தல' டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை பெற்ற நிறுவனங்கள் இவைதான்..!

 சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் 31ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளது.