close
Choose your channels

'தர்பார்' ரிலீஸ் தேதியில் 'பட்டாஸ்': படக்குழுவினர்களின் அதிரடி முடிவு

Sunday, January 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படமும் ஜனவரி 16 ஆம் தேதி தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ திரைப்படமும் வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இந்த இரண்டு படங்களின் புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஜனவரி 9ஆம் தேதி ரஜினியின் ‘தர்பார்’ படம் ரிலீஸாகும் அதே தேதியில் தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலரை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அனேகமாக ‘தர்பார்’ ரிலீஸாகும் திரையரங்குகளிலும் ‘பட்டாஸ்’ படத்தின் டிரைலர் திரையிடப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் முதல் பாடல்கள், மோஷன் போஸ்டர் வரை மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிரைலரும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்ஜதா, ஜெகபதிபாபு, முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். விவேக்-மெர்வின் இசையில் ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவில் பிரகாஷ்பாபு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.