யாருமே எனக்கு சொல்லி கொடுக்க முன்வரவில்லை.. மூன்றே நாளில் பழகிவிட்டேன்: பவித்ரா லட்சுமி
Send us your feedback to audioarticles@vaarta.com
என் உறவினர்கள் நண்பர்கள் என யாருமே எனக்கு சொல்லிக் கொடுக்க முன்வரவில்லை என்றும் ஆனால் தற்போது நான் மூன்றே நாட்களில் பழகி விட்டேன் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பவித்ரா லட்சுமி கூறியதோடு அசத்தலான வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான நடிகை பவித்ரா லட்சுமி, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’ஓ காதல் கண்மணி’ என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பின்னர் ’நாய் சேகர்’ உள்பட சில தமிழ் படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்தார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா லட்சுமிக்கு இரண்டு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் நிலையில் சற்றுமுன் அவர் ராயல் என்ஃபீல்டு புல்லட் ஓட்ட கற்றுக் கொண்டதாக பெருமையுடன் கூறியதோடு,அது குறித்த வீடியோவையும் பதிவு செய்துள்ளார் அந்த வீடியோவின் கேப்ஷனாக அவர் கூறியிருப்பதாவது:
ஆண்களுக்கான இந்த பைக்கை ஓட்ட வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவாக இருந்தது, நான் பலமுறை என் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் என் உறவில் இருந்தவர்களிடம் இந்த பைக்கை ஓட்ட கற்றுக் கொடுக்கும் படி கேட்டேன். ஆனால் என்னால் இதை ஓட்ட முடியும் என்று யாரும் நம்பவில்லை. மேலும் எனக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுக்கும் பொறுமையும் நேரமும் அவர்களிடம் இல்லை.
ஆனால் இப்போது நான் மூன்றே நாட்களில் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்ட கற்றுக் கொண்டேன், எனக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்தவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்றி. இதனை மிகப் பெரிய சாதனையாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் அசத்தலாக ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout