குக் வித் கோமாளி பவித்ராவுக்கு என்ன ஆச்சு? வதந்திக்கு அளித்த விளக்கம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பவித்ரா லட்சுமி குறித்த வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அவர் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கிய ’ஓகே கண்மணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான பவித்ரா, அதன் பிறகு ’நாய் சேகர்’, ’உல்லாசம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். மேலும் அவர் ‘குக் வித் கோமாளி’ உள்பட ஒருசில டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் பவித்ரா லட்சுமி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அளவுக்கு அதிகமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால் அவரது உடலில் அலர்ஜி ஏற்பட்டு, ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவி வருகிறது.
இந்த வதந்திக்கு பதிலளித்த பவித்ரா, "என்னைப் பற்றி பரவி வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமில்லாதது. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளேன், அதை செய்து உள்ளேன், இதை செய்து உள்ளேன் என்று அடிப்படை ஆதாரம் இல்லாத தகவல்களை பரப்ப வேண்டாம். நான் எந்த ஒரு உடல்நல பிரச்சனையையும் எதிர்கொள்ளவில்லை. எதற்காகவும் சிகிச்சை பெறவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இதுபோன்ற வதந்திகளை தயவு செய்து பரப்ப வேண்டாம். "உங்கள் பொழுதுபோக்கிற்காக என்னுடைய பெயரையும், வாழ்க்கையையும் கெடுக்க வேண்டாம். எனக்கும் ஒரு எதிர்கால வாழ்க்கை உள்ளது, அதை இன்னும் கடினம் ஆக்க வேண்டாம். உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் எதை செய்ய வேண்டாம் என்று நினைப்பீர்களோ, அதை மற்றவர்களுக்கும் செய்ய வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
பவித்ரா லட்சுமியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com