close
Choose your channels

சீரியஸான உடல்நல பிரச்சனை.. தீவிர சிகிச்சையில் இருக்கிறேன்: குக் வித் கோமாளி பவித்ராவின் பதிவு..!

Wednesday, April 23, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பவித்ரா லட்சுமி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது உடல்நலம் குறித்து வெளியாகி கொண்டிருக்கும் தகவல்கள் பொய்யானது என்றும், தான் நலமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது, “தான் தீவிர உடல்நல பிரச்சனைகளை எதிர் கொண்டிருப்பது உண்மைதான். இதற்காக தீவிர சிகிச்சை பெற்று வருகிறேன்,” என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: “எனது தோற்றம் மற்றும் எடையைப் பற்றி பல்வேறு செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன. இதற்கு நான் பலமுறை விளக்கம் அளித்தாலும், அந்த தகவல்கள் பரவுவது நிற்கவில்லை. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருப்பதாகவும், அதை செய்துள்ளேன் இதை செய்துள்ளேன் என்றும் தவறான தகவல்களை மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், நான் சீரியசான உடல்நிலை பிரச்சனைகள் கொண்டிருப்பது உண்மைதான். தற்போது அதற்கான சிகிச்சையையும் மேற்கொண்டு வருகிறேன். என்னை சேர்ந்தவர்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள்.

உண்மையில் என் மீது அன்பு கொண்டு, என்னுடைய நலன் குறித்து விசாரித்தவர்களுக்கு நன்றி. என்னைப் பற்றி மீடியா மற்றும் ஊடகங்கள் தயவுசெய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்.

எனக்கும் வாழ்க்கை உள்ளது. நான் என்னுடைய எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும். வதந்திகளை பரப்புவதால், என்னுடைய கடினமான சூழ்நிலை மேலும் கடினம் ஆகி விடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களிடம் இருந்து நான் அன்பையும் மரியாதையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன். விரைவில் மீண்டு வருவேன்,” என்றும் பவித்ரா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment