தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனது பண்ணை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் மேலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது செயலாளர் தகவல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது அலை கொரோனா பாதிப்பு தீவிரம் பெற்று வரும் நிலையில் சமீபத்தில் சச்சின், நடிகர் அமீர்கான், ஆலியாபட், ரன்வீர் கபூர், தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் உள்ளிட்ட பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தெலுங்கின் முன்னணி நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பவண் கல்யாணின் செயலாளர் ஹரிபிரசாத் அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நடிகர் பவண் கல்யாணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எனினும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து பவண் கல்யாணை அவரது குடும்ப மருத்துவரும் அப்போல்லோ மருத்துவமனை நிபுணர் குழுவினரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மேலும் முதலில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது பாதிப்பு இல்லை என்ற முடிவு வந்த நிலையில் அவருக்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்ததால் இரண்டாவது முறையாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதியானது எனத் தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அனைவரும் நடிகர் பவண் கல்யாண் விரைவில் குணமாகி இயல்பு நிலைக்கு வர வேண்டும் என விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

More News

திரையுலகம் இருக்குற வரைக்கும் தம்பி விவேக் வாழ்ந்துகிட்டு தான் இருப்பாரு: நடிகர் பிரபு

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய விவேக் அவர்கள் இன்று காலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள்

விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு: கமல்ஹாசன்

நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உடல்நலக் கோளாறு காரணமாக காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து

விவேக் இடத்தை இனி எவராலும்‌ நிரப்ப முடியாது: தமிழக முதல்வர் இரங்கல் செய்தி!

நடிகர் விவேக் மறைவு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் 'விவேக் இடத்தை இனி எவராலும்‌ நிரப்ப முடியாது' என்று தெரிவித்துள்ளார்

பத்மஸ்ரீ விருது, அப்துல் கலாமின் உண்மைத்தொண்டர்: விவேக் ஒரு காமெடி சகாப்தம்!

தமிழ் திரையுலகின் காமெடி மன்னன் என்று புகழ் பெற்ற கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய காமெடி காட்சிகளோடு சமூக கருத்துக்களையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பார்.

சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாட்கள்: விவேக் மறைவு குறித்து ரஜினிகாந்த்!

சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார் செய்தி திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது