close
Choose your channels

தமிழ் நடிகைகள் என்றால் இளக்காரமா? பாலிவுட்டை கடுமையாக சாடும் பிரபல நடிகை

Friday, June 26, 2020 • தமிழ் Comments

பொதுவாக தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் செய்பவர்களுக்கு சரியான மரியாதை இருக்காது என்று கடந்த பல வருடங்களாக கூறப்பட்டு வருகின்றன. இந்த அனுபவம் கமல் ரஜினி போன்ற நடிகர்களுக்கே கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதுண்டு

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு நடிகைகளை பாலிவுட் திரை உலகினர் இளக்காரமாக பார்க்கிறார்கள் என்று நடிகை பாயல் கோஷ் கூறியுள்ளார். தமிழில் ‘தேரோடும் வீதியிலே’ என்ற படத்திலும், ஒருசில தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள பாயல் கோஷ், ஒருசில பாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும்போது அவரிடம் தமிழ் தெலுங்கில் நடித்து ஏன் வாழ்க்கையை கெடுத்துக் கொள்கிறாய் என்றும், பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்து என்றும் பாலிவுட் திரையுலகினர் தன்னிடம் கூறியதாக பாயல் கோஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

ஆனால் பாலிவுட் திரை உலகில் கவனம் செலுத்துவதைவிட தமிழ் தெலுங்கில் ஏன் கவனம் செலுத்தவில்லை என்று இப்போது தான் வருந்துவதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினர் ஹீரோயின்களை தெய்வமாக கருதுகிறார்கள் என்றும், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நல்ல மரியாதை கொடுக்கிறார்கள் ஒருசில ஹீரோயின்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டி இருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் செல்லும் நடிகைகளை பாலிவுட் திரை உலகினர் இளக்காரமாக பார்ப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்

நடிகை பாயல் கோஷ் ஏற்கனவே தனது சமூக வலைத்தளத்தில் தான் மிகுந்த மன அழுத்தத்துடன் இருப்பதாகவும் எதைக் கண்டாலும் மரணபயம் வருவதாகவும் இருப்பினும் தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆறுதலாக இருந்ததால் அதிலிருந்து மீண்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் குறிப்பிட்டிருந்தார்

Get Breaking News Alerts From IndiaGlitz