மெர்சலுக்கே இப்படின்னா 'பராசக்தி' இன்று வந்திருந்தால்? ப.சிதம்பரம்

  • IndiaGlitz, [Saturday,October 21 2017]

தளபதி 'மெர்சல்' படம் வெற்றி பெற்றதற்கு விஜய் ரசிகர்களை விட இலவச புரமோஷன் செய்து வரும் அரசியல்வாதிகளுக்குத்தான் உண்மையில் 'மெர்சல்' படக்குழுவினர் நன்றி கூற வேண்டும். குறிப்பாக பாஜகவினர் எதிர்ப்பு காரணமாக இந்த படத்தை பார்க்க விருப்பமில்லாமல் இருந்தவர்கள் கூட பார்க்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் படத்திற்கு மேலும் வரவேற்பு அதிகரித்துள்ளது.

'மெர்சல்' படம் குறித்து கருத்து தெரிவிக்காத அரசியல்வாதிகளே இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட ஏற்பட்டுவிட்டது. இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் பிரமுகருமான ப.சிதம்பரம் இந்த படம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

'அரசின் கொள்கைகளை புகழ்ந்து மட்டுமே இனி படம் எடுக்க வேண்டும் என்ற சட்டம் வந்தாலும் வரலாம் என்றும், மெர்சலுக்கே பாஜகவினர் இப்படி பயப்படுகிறார்கள் என்றால் 'பராசக்தி' படம் இன்று வெளியாகியிருந்தால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து பாருங்கள் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா வரலாற்றில் கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய 'பராசக்தி' திரைப்படம் அரசியல் மற்றும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்திய முதல்படம் என்று கூறலாம். 

More News

மெர்சலுக்காக குரல் கொடுத்த கமல்ஹாசன்

பொதுவாக விஜய் நடித்த திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்பு பிரச்சனைகளை சந்தித்து வருவது வழக்கம். ஆனால் 'மெர்சல்' திரைப்படம் மட்டும் ரிலீசுக்கு முன்பும், பின்பும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.

'மெர்சல்' படம் பார்த்து பாராட்டு தெரிவித்த வைகோ

'தளபதி' விஜய்யின் 'மெர்சல்' திரைப்படம் ஒரு திரைப்படம் என்பதையும் தாண்டி ஒரு சமுதாய பிரச்சனையாக கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் விவாதம் செய்யப்பட்டு வருகிறது.

'மெர்சல்' விவகாரம்: எச்.ராஜாவுக்கு தணிக்கை அதிகாரி பதில்

மத்திய அரசு அறிமுகம் செய்த ஜிஎஸ்டி வரிக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் சமூக நல ஆர்வலர்களும் செய்த போராட்டம் கொடுக்காத விழிப்புணர்வை தளபதி விஜய்யின் ஒரே ஒரு திரைப்படம் மக்களுக்கு கொடுத்துவிட்டது.

'மெர்சல்' படக்குழுவினர்களுக்கு சீமான் பாராட்டு

சீமான் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் மேடைகளிலும் இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை கொடுப்பதற்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவ வசதியை இலவசமாக அரசு கொடுக்க வேண்டும்

மெர்சல்-ஜிஎஸ்டி பிரச்சனைக்கு குரல் கொடுக்கும் திரையுலக பிரபலங்கள்

தளபதி விஜய்யின் 'மெர்சல்' திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் தற்போது இந்தியா முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது. பாஜகவின் எதிர்ப்பையும் மிரட்டலையும் அனைத்து எதிர்க்கட்சிகளும் தட்டிக்கேட்டு 'மெர்சல்'