அமைதியாக போராடுபவர்களை தேசவிரோதிகள் என சொல்லக் கூடாது..! உயர்நீதிமன்றம்.

  • IndiaGlitz, [Saturday,February 15 2020]

மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி மறுத்திருக்கின்றனர். மேலும், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த மாவட்ட நீதிமன்றமும் போராட்டத்துக்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருக்கிறது. இதை எதிர்த்து, இஃப்திகார் ஜாகி ஷேக் என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தின் ஔரங்காபாத் கிளையில் மேல்முறையீடு செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி -க்கு எதிராக, மஜால்கான் பகுதியில் தினசரி மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால், அவர்கள் அனுமதி மறுத்தனர். இதை எதிர்த்து மாவட்ட நீதிமன்றம் சென்றபோது, அங்கும் அனுமதி மறுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என போலீஸார் தாக்கல் செய்த மனுவை ஏற்று, நீதிமன்றம் அந்த உத்தரவை பிறப்பித்தது. அமைதியான முறையில் மாஜால்கான் பகுதியில் உள்ள பழைய இத்கா மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் ஔரங்காபாத் கிளை, பீட் மாவட்ட நீதிமன்றம் மற்றும் பீட் மாவட்ட காவல்துறை பிறப்பித்த உத்தரவுகளுக்குத் தடை விதித்தது. மேலும், அமைதியான முறையில் போராட முயல்பவர்களை, அவர்கள் ஒரு சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக தேசவிரோதிகள் என்றோ, துரோகிகள் என்றோ அழைக்கப்படக் கூடாது. எனவே, அமைதியான முறையில் போராட்டம் நடத்த அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. சி.ஏ.ஏ -வுக்கு எதிராக அமைதியாகப் போராட்டம் நடத்துவதால், அவர்கள் சட்டத்தை மதிக்கவில்லை என்று பொருளாகாது. சி.ஏ.ஏ -வைக் கொண்டுவந்த அரசுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே அது பார்க்கப்பட வேண்டும்.

வன்முறை இல்லா அமைதியான போராட்டங்கள் மூலமே நமது நாடு விடுதலைபெற்றது. நம் முன்னோர்களின் அந்தப் பாதையை இன்று வரை மக்கள் பயன்படுத்திவருகிறார்கள். நம் நாட்டின் பெரும்பாலான மக்கள், அந்த வழியையே பின்பற்ற விரும்புவது, நமது அதிர்ஷ்டம். இந்த விவகாரத்தில்கூட மனுதாரர்கள், அமைதியான முறையில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட விரும்புகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நம் முன்னோர்கள் நமது விடுதலைக்காகவும், மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்காகவும் அமைதியான முறையில் போராடினர். அந்தப் போராட்டங்களின் பின்னணியில் உள்ள தத்துவத்தின் அடிப்படையிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது என நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருக்கிறது.

More News

சன்னிலியோன் எடுக்கும் புது முயற்சி: அதுக்கு இவர் செட் ஆவாரா?

ஆபாச படங்களில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற சன்னிலியோன் அதன்பின்னர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். பாலிவுட்டில் அவருடைய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு

உலகம் முழுவதும் சுற்றப்போகும் ஏ.ஆர்.ரஹ்மானின் 'ஹேண்ட்ஸ் அவுண்ட் தி வேர்ல்ட்' 

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் உள்பட இந்திய திரைப்படங்களில் இசையமைக்கும் பணிகளில் பிசியாக இருந்தாலும் அவ்வபோது தனிப்பாடல்களை கம்போஸ் செய்து வருவார் என்பது தெரிந்ததே.

இயக்குனராகும் பிரபல நடிகை: பத்ரி வெங்கடேஷ் வாழ்த்து

கடந்த 2006 ஆம் ஆண்டு 'ஒரு நாள் ஒரு கனவு' என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் 'ராமன் தேடிய சீதை', 'குள்ளநரிக்கூட்டம்,

5வது வருட காதலை கொண்டாடிய விக்னேஷ்-நயன்: வைரலாகும் புகைப்படங்கள்

கடந்த 2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடிதான்' என்ற படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது தான் விக்னேஷ் சிவன் மற்றும்

தேனியில் கழுதைக்கும் நாய்க்கும் நடந்த வினோத திருமணம் – காதலர் தின எதிர்ப்பு

உலகம் முழுவதும் காதலின் அடையாளமாக “பிப்ரவரி 14” காதலர் தினம் கொண்ĩ