மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் ஆதரவு இருப்பதாகவும், சசிகலாவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆதரவு மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அரசியல் உள்பட சமூக கருத்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் அதிரடியாக வெளிப்படுத்தி வரும் உலக நாயகன் கமல்ஹாசன், நேற்றைய முதல்வரின் அதிரடி குறித்து கூறியபோது, 'சில வருடங்களுக்கு முன் இதே பிப்ரவரி 7மஆம் தேதி தான் விஸ்வரூபம் படம் பல சிக்கல்களுடன் வெளியானது. அந்த நாட்களை நினைவு கூறும் தருணத்தில், மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணையாக நின்று ஆதரவு தெரிவிப்பார்கள்' என்று கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு டுவீட்டில், ' “தமிழக மக்களே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்பாக அவர்கள் எழுந்து விடுவார்கள்.” என பதிவு செய்துள்ளார். கமல்ஹாசனின் இந்த கருத்தின் உள்ளர்த்ததை பலர் புரிந்து கொண்டதாகவும், ஒருசிலர் புரியவில்லை என்றும் கமெண்ட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

More News

நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது...

அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கம். சசிகலா நடவடிக்கை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்று இரவு தனது உள்ளக்குமுறல்களை ஜெயலலிதா நினைவிடத்தில் எழுப்பியது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. கட்சியின் தலைமையால் மிரட்டப்பட்டு நிர்ப்பந்தத்தின் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்தேன் என்று அவர் கூறியது தமிழக மக்களை மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது...

ஓபிஎஸ் அதிரடியை தொடர்ந்து அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சற்று முன்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தான் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், மக்களும் தொண்டர்களும் விரும்பும் ஒருவர்தான் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் வரவேண்டும் என்பதற்காக தன்னந்தனியாக போராடுவேன் என்று அதிரடியாக பேட்டி அளித்தார்...

ஓபிஎஸ் பேட்டியை தொடர்ந்து ஆளுனர் அலுவலகத்தின் முக்கிய தகவல்

தமிழக முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் அதிரடி பேட்டியை அடுத்து ஒருபக்கம் சசிகலா மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக பொறுப்பு கவர்னராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களின் அலுவலகத்தில் இருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வந்துள்ளது...

ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டேன். இறுதிவரை தனியாக போராடுவேன். ஜெ.நினைவிடத்தில் ஓபிஎஸ் அதிரடி

தமிழக முதல்வர் ஓபிஎஸ் நேற்று முன் தினம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு சசிகலாவை முதல்வராக முன்மொழிந்தார். அதன்பின்னர் சசிகலா முதல்வர் பதவியை ஏற்க தயாராகியுள்ள நிலையில் இன்று சற்று முன்னர் முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேல் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்துவிட்டு பின்னர் செய்&