பெப்சி நிறுவன ஊழியர்களுக்கு கொரோனாவா? அதிர்ச்சித் தகவல் 

உலகம் முழுவதும் குளிர்பானங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் பெப்சி. இந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுவதால் அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சீனாவில் உள்ள பீஜிங் பெப்ஸி நிறுவனத்தில் சமீபத்தில் உணவு பதப்படுத்தும் பணியில் உள்ள ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கனவே சீனாவில் கொரோனா வைரஸ் முதல் அலை முடிந்து இரண்டாவது அலை வீசுவதாக கூறப்படும் நிலையில் சீனாவில் உள்ள பெப்ஸி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால் பெப்சி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆனால் தங்கள் நிறுவனத்தின் குளிர்பானங்கள் மற்றும் சிற்றுண்டி பொருட்கள் பாதுகாப்பானவை என்று சீனாவில் உள்ள பெப்ஸியின் கிளை நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெப்ஸி நிறுவனத்தில் புரியும் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக வந்துள்ள தகவல்கள் நுகர்வோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெப்சி நிறுவனம் பீஜிங்கில் உள்ள நிறுவனத்தின் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சீன அரசு நோய்த் தொற்று பரவல் அதிகரிப்பதால் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்து அதிக அளவிலான பரிசோதனைகளை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்யும் ஆங்கில ஆசிரியர்: அதிர்ச்சி தகவல் 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி வருமானம் இன்றி உள்ள நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சரிவர சம்பளம் வராததால்

30 கிலோ எடைக்குறைப்பு: லாக்டவுனை சரியாக பயன்படுத்திய காமெடி நடிகை 

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கிய 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படத்தில் நாயகி சமந்தாவின் தோழியாக அறிமுகம் அறிமுகமானார் நடிகை வித்யூலேகா.

வனிதா விஜயகுமார் வீட்டுக்கு மனைவியுடன் சென்று சர்ப்ரைஸ் அளித்த தளபதி விஜய்

தளபதி விஜய்யின் பிறந்த நாள் சமீபத்தில் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா விஜயகுமார் வீட்டிற்கு சென்று விஜய் சர்ப்ரைஸ் அளித்த

காசியால் பாதிக்கப்பட்ட பெண்களை தனி ரூட் போட்டு மயக்கிய நண்பர்: அதிர்ச்சி தகவல்

பள்ளி மாணவிகள் முதல் நடுத்தர வயது குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி தற்போது கைது செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

திருமணத்திற்கு முந்தைய நாள் மணப்பெண் கொலை: டிக்டாக் ஸ்டாரின் வெறிச்செயல்

திருமணத்திற்கு முந்தைய நாள் இரவில் மணமகளை வெறித்தனமாக கொலை செய்த டிக்டாக் ஸ்டார் ஒருவரால் உத்திரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது