பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை, தமிழக அரசின் நிலைப்பாடு- பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு என்ன முடிவு எடுத்துள்ளது என்பதைத் தெளிவு படுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பதிலளிக்க தமிழக அரசிற்கு 2 வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

நீதிபதிகள் எல் நாகேஷ்வர ராவ் மற்றும் தீபக் குப்தா ஆகியோரைக் கொண்ட அமர்வு இன்று இந்திய அரசியலமைப்பின் பிரிவு 161 வது பிரிவின் கீழ் குற்றவாளிகள் குறித்து எடுக்கப்பட்ட முடிவு பற்றி தெரிவிக்குமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னர் பேரறிவாளன் எம்.டி.எம்.ஏ (ஒழுக்கக் கண்காணிப்பு பிரிவு) குறித்த விசாரணை முடியும் வரை இந்த வழக்கில் தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு மனு அளித்திருந்தார். இந்த மனுவினை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதில் பேரறிவாளன் சார்பாக மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜரானார்.

அப்போது நீதிமன்றம் பேரறிவாளனுக்கு தண்டனை வழங்கியிருந்தாலும் ஆளுநரிடம் கோரப்பட்ட கருணை மனு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது என வழக்கறிஞர் சங்கரநாராயணன் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார்.

முன்பு சிபிஐ சார்பில் தயாரிக்கப்பட்ட எம்.டி.எம்.ஏ. (ஒழுக்கக் கண்காணிப்பு பிரிவு) குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 14 மத்திய அரசு சமர்பித்திருந்தது. இந்த அறிக்கைக்கும் இதற்கு முன் அளிக்கப்பட்டு இருந்த அறிக்கைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என உச்ச நீதிமன்றம் முந்தைய விசாரணையில் அதிருப்தி தெரிவித்து இருந்தது. எனவே புதிய நிலவர அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்டவர்கள் குறித்து தமிழக அரசு என்ன முடிவு செய்திருக்கிறது என தான் தெரிந்து கொள்ள வேண்டும் என நீதிபதி எல். நாகேஷ்வர ராவ் கூறினார். எனவே அரசியலமைப்பு பிரிவு 161 கீழ் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

More News

ஒரு போலீஸ்காரன் எப்ப அடிக்கணும், எப்ப அமைதியா இருக்கணும்: பொன்மாணிக்கவேல் டிரைலர்

முதல் முறையாக பிரபுதேவா போலீஸ் கேரக்டரில் நடித்துள்ள 'பொன்மாணிக்கவேல்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஜுன் 1 முதல் நாடு முழுவதும் ‘ஒரே தேசம், ஒரே ரேஷன்’ கார்டு திட்டம் நடைமுறை  - மத்திய அமைச்சர் அறிவிப்பு

‘ஒரு நாடு, ஒரு ரேஷன்’ அட்டை திட்டம் ஜுன் 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது என மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்

3 வயது குழந்தைக்கு மது கொடுத்துவிட்டு கல்லூரி மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த பெண்: அதிர்ச்சி தகவல்

கல்லூரி மாணவர்கள் மூவருடன் உல்லாசமாக இருந்து பெண்மணி ஒருவர் தனது குழந்தை அழுது தொல்லை கொடுத்ததால் அந்த குழந்தைக்கு மது கொடுத்த ஈவிரக்கமற்ற பெண்ணின் செயல் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் ஹீரோ!

பிரபல பாலிவுட் ஹீரோக்கள் தென்னிந்திய படங்களில் நடிப்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் 'ஆர்.ஆர்.ஆர்.'

வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்த அடுத்த படத்தின் சென்சார் மற்றும் ரிலீஸ் தகவல்!

கடந்த சில ஆண்டுகளாக வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு