சிம்புவின் அடுத்த அதிரடி 'பெரியார் குத்து'

  • IndiaGlitz, [Saturday,May 26 2018]

நடிகராக மட்டுமின்றி பல்வேறு திறமைகள் கொண்ட சிம்பு, அவ்வப்போது தனிப்பாடல்கள் பாடி வெளியிட்டு வருவது தெரிந்ததே. அந்த வகையில் அவர் தற்போது புதிய தனிப்பாடல் ஆல்பம் ஒன்றில் பாடியுள்ளார். இந்த பாடல் 'பெரியார் குத்து' என்ற பெயரில் விரைவில் வெளியாகவுள்ளது

மதன் கார்க்கி பாடல் வரிகளில், ரமேஷ் தமிழ்மணி இசையில் உருவாகவுள்ள இந்த பாடலை சிம்பு பாடவுள்ளதாகவும், இந்த ஆல்பத்தை தீபன் பூபதி மற்றும் ரதீஷ்வேலு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்குக் முன்னர் தமிழகத்தில் பெரியார் சிலை உடைப்பு விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பாடலில் இந்த சம்பவம் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள இந்த பாடல் வெளியாகும் வரை பொறுமை காப்போம்

More News

வெங்கட்பிரபுவின் 'ஆர்.கே.நகர்' சென்சார் தகவல்கள்

வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிப்பில் உருவாகி வந்த 'ஆர்.கே.நகர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது

சன்னிலியோனை 1000 முறை கதற வைத்த படம்

நடிகை சன்னிலியோன், தற்போது 'வீரமாதேவி' என்ற சரித்திர படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படம் தமிழ் உள்பட மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது என்பதும் தெரிந்ததே.

'சாமி 2' டிரைலர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

விக்ரம் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படம் இந்த ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்து மிகபெரிய வரவேற்பை பெற்றது.

சமுத்திரக்கனியின் 'நிமிர்ந்து நில்' மீண்டும் ரிலீஸ் ஆவது ஏன்?

பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால், சரத்குமார் நடித்த 'நிமிர்ந்து நில்' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

பிறந்த நாளில் ரசிகர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுத்த நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி சமூக அக்கறையுடையவர் என்பது பல நேரங்களில் தெரிய வந்துள்ளது. நடிகர், நடிகர் சங்க பொருளாளர் பணிகளுக்கு இடையே அவர் செய்து வரும் சமூக சேவைகள் பாராட்டப்படும்