திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை: மத்திய அரசு புதிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,January 27 2021]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 10 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் திரையரங்குகளை திறக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி அளித்திருந்தது ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படத்திற்கு கூட 50% பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா ஊரடங்கு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது

இதில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் ஊரடங்கை நீடித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 சதவீதத்துக்கும் மேலான இருக்கைகளுக்கு மத்திய உள்துறை அனுமதி அளித்துள்ளது. திரையரங்குகளில் கூடுதல் பார்வையாளர்களை அனுமதிக்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் அதிக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது உறுதியாகி உள்ளது

More News

ஜெயலலிதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்க்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

'அண்ணாத்த' படத்தை முந்துகிறதா 'தளபதி 65?

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகவுள்ள 'தளபதி 65' திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு முன்பாக வெளிவர வாய்ப்பு

ஹரி-அருண்விஜய் படத்தின் நாயகி இவர்தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகர் அருண் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குனர் ஹரி இயக்க உள்ளார் என்பதும் அருண் விஜய்யின் 33வது படமான இந்த படம் அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்ப சென்டிமென்ட் கலந்த படம்

விமான விபத்தில் 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! பரிதாப சம்பவம்!

தென் அமெரிக்க நாடானா பிரேசிலில் நடைபெற்ற ஒரு சிறிய ரக விமான விபத்தில் அந்நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர்.

தீரன்பட பாணியில் செயல்பட்ட கொள்ளைக் கும்பல் பிடிபட்டது எப்படி? வடமாநிலக் கும்பலா?

சீர்காழியில் 2 பேரை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.