close
Choose your channels

தனுஷின் 'அசுரன்' படத்தில் இணைந்த தேசிய விருது பெற்ற கலைஞர்!

Tuesday, February 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'அசுரன்' திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் விருதுநகரில் தொடங்கியது. இந்த படப்பிடிப்பில் அதிரடி ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை அமைக்க தேசிய விருது பெற்ற பீட்டர் ஹெயின் தற்போது படக்குழுவினர்களுடன் இணைந்துள்ளார். தனுஷின் முந்தைய படங்களோடு ஒப்பிடுகையில் இந்த படத்தின் ஆக்ச்ன் காட்சிகள் வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தனுஷ் ஜோடியாக முதல்முறையாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கும் இந்த படத்தில் வடிவேலு, அஜய்ராஜ், பிரேம்ஜி அமரன், விஜய்வசந்த், வைபவ், நிதின் சத்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவும் விவேக் ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.