close
Choose your channels

'பேட்ட' தமிழக ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்?

Saturday, December 8, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்துள்ள 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக இந்த படத்தின் புரமோஷன் முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நடிகரும் தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பெற்றூள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த தகவலை சன்பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்யவில்லை.

ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய்சேதுபதி, நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத்தின் இசையில் ஏற்கனவே வெளியான 'மரணமாஸ் மற்றும் உல்லல்லா ஆகிய இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.