close
Choose your channels

விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தை இயக்கும் தேசிய விருது பெற்ற பெண் இயக்குனர்!

Friday, July 24, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி, கடந்த 2012ஆம் ஆண்டு வெளிவந்த ’நான்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் தந்த வெற்றியை அடுத்து ’சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்

இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

விஜய் ஆண்டனியின் 10வது படமாக உருவாகவிருக்கும் ’பிச்சைக்காரன் 2’ திரைப்படத்தை பிரியா கிருஷ்ணசாமி என்ற பெண் இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ‘பாரம்’ என்ற திரைப்படத்தை சமீபத்தில் இயக்கினார் என்பதும் இந்த படம் தேசிய விருதை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ‘பிச்சைக்காரன் 2’ உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி’ உள்பட ஒருசில படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.