close
Choose your channels

பிசாசு நடிகையுடன் ஜோடி சேர்ந்த விஷ்ணு

Friday, July 10, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' திரைப்படத்தில் ஒருசில காட்சிகளில் மட்டும் நாயகியாகவும், பின்னர் படம் முழுவதும் பேயாகவும் நடித்தவர் நடிகை பிரயாகா. பிசாசு' படம் வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும், இந்த படத்தில் நடித்த பிரயாகாவிற்கு கோலிவுட்டில் வேறு படங்கள் புக் ஆகாமல் இருந்தது. பெரும்பாலான காட்சிகளில் இவர் பேயாக நடித்திருந்ததால், இவருடைய நடிப்பு திறமை வெளியே தெரியாமல் இருந்தது.


இந்நிலையில் தற்போது ஒரு தமிழ் படத்தில் நடிக்க பிரயாகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆர்.கண்ணன் தற்போது இயக்கி வரும் 'போடா ஆண்டவனே என் பக்கம்' என்ற படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக பிரயாகா நடிக்கவுள்ளார்.

ரஜினிகாந்த் அவர்களின் சூப்பர் ஹிட் வசனத்தையே டைட்டிலாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்திற்கு பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். செல்வா படத்தொக்குப்பு செய்யும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், மிக விரைவில் இந்த படம் ரீலீஸாகும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.