close
Choose your channels

12ஆம் வகுப்பு மதிப்பெண் வெளியிடும் தேதி: தமிழக அரசு அறிவிப்பு!

Friday, July 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டாலும், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் விரைவில் 12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியாகும் என்று செய்திகள் வெளியான நிலையில் சற்று முன் தமிழக அரசு தேர்வுத்துறை ஜூலை 19ஆம் தேதி 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dg2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

மேலும் www.deg.tn.gov.in, www.dge.tn.nic.in ஆகிய இணையதளங்களில் மதிப்பெண்களை ஜூலை 22ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

மேலும் மாணவர்கள் பள்ளிகளில் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.