close
Choose your channels

வெளியானது பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

Friday, April 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வுத்துறை ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன் தேர்வு முடிவுகள் வெளியானது.

இந்த தேர்வின் முடிவுகளை மாணவர்கள் http://www.tnresults.nic.in , http://www.dge1.tn.nic.in .
http://www.dge2.tn.nic.in
ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 91.03% என்றும், இதில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.64% என்றும் மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 88.57% என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் மாணவர்களைவிட மாணவிகள் தேர்ச்சி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அளவில் 95.37% மாணவர்கள் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. ஈரோடு 95.23% தேர்ச்சி பெற்று 2-வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 95.15% தேர்ச்சி பெற்று 3-வது இடத்தையும் பெற்றுள்ளது.

மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முக்கிய பாட வாரியான தேர்ச்சி விகிதம்

இயற்பியல்: 93.89%
வேதியியல்: 94.88%
உயிரியல்: 96.05%
கணிதம்: 96.25%
தாவரவியல்: 89.98%
விலங்கியல்: 89.44%
கணினி அறிவியல்: 95.27%
வணிகவியல்: 91.23%
கணக்குப்பதிவியல்: 92.41%

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.