சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் இன்று அதிகாலையே போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டின் அருகே கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு தனது பிறந்தநாளை தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுளுடன் நல்ல ஆரோக்கியமான வாழ்வை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை ரஜினிக்கு தெரிவித்துள்ளார். அவர் தனது பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ‘தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனி முத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அவர்கள் மகிழ்ச்சியுடனும், நல்ல ஆரோக்யத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

More News

ரஜினியின் 'அண்ணாத்த' அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது?

ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் தனது அரசியல் வருகையை உறுதி செய்த போது 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40% இருப்பதாகவும் அவற்றை விரைவில் முடித்துக் கொடுக்க திட்டமிட்டு இருந்ததாகவும் கூறினார் 

சார்ஜ் போட்ட ஐபோன்… இளம்பெண்ணின் உயிரைப் பறித்த பரிதாபம்… உஷாரா இருங்க மக்களே!!!

ரஷ்யாவில் தன்னுடைய ஐபோனை சார்ஜ் போட்ட இளம்பெண் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

10 வருடங்களுக்கு முன் கணவருடன் பிக்பாஸ் அர்ச்சனா: வைரலாகும் புகைப்படம்!

சன் டிவியில் 'காமெடி டைம்' என்ற நிகழ்ச்சியில் ஆங்கராக அறிமுகமாகி அதன் பின்னர் பல தொலைக்காட்சிகளில் சீரியல் நடிகையாவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஆங்கராகவும் இருந்து வருபவர் அர்ச்சனா 

பீச் அருகே டூபீஸ் பிகினி: பிரபல நடிகையின் புகைப்படம் வைரல்!

பிரபல நடிகை ஒருவர் ஹவாய் தீவிலுள்ள பீச்சில் டூ பீஸ் பிகினியில் உள்ள புகைப்படத்தை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சச்சின் செய்யும் அசத்தல் பாராசைலிங்… லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வீடியோ!!!

கொரோனா காலத்தில் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது