close
Choose your channels

நடுக்காடு, கையில் துப்பாக்கி: ஒரு த்ரில் பயணத்தில் பிரதமர் மோடி

Monday, July 29, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரதமர் மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுப்பயணம் செய்யாத நாடு இல்லை என்றே கூறப்படுகிறது. அவர் இந்தியாவில் இருந்ததை விட வெளிநாட்டில் இருந்த நாட்கள் தான் அதிகம் என எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வதுண்டு

இந்த நிலையில் இதுவரை இல்லாத வகையில் ஒரு வித்தியாசமான த்ரில் பயணத்தை பிரதமர் மோடி தற்போது செய்துள்ளார். அதுதான் நடுக்காட்டில் த்ரில் பயணம். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வரும் 'Man vs Wild' என்ற நிகழ்ச்சிக்காக தொகுப்பாளர் பியர்ஸ் கிரில்ஸ் உடன் பிரதமர் மோடி ஒரு த்ரில் பயணம் செய்துள்ளார். அடர்ந்த காட்டில் ஆபத்தான சூழலில் ஒருவர் மாட்டிக்கொண்டால் எப்படி தப்பிப்பது என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டாக்குமெண்டரி படத்தில் மோடி தோன்றுவதால் உலகம் முழுவதிலும் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா உள்பட பல சர்வதேச பிரபலங்கள் தோன்றியுள்ள நிலையில் தற்போது இந்திய பிரதமரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ தற்போது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இரவு 9 மணிக்கு டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பார்க்க இந்தியர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.