ஊரடங்கு சமயத்தில் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை: பிரதமர் மோடி 

பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடம் உரையாற்றவுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பேசியதன் சாரம்சம்:

ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம்.

இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது.

சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

சிறிய அளவிலான அலட்சியம் கூட உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

அரசு அதிகாரிகள், மக்கள் தற்போது மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை மக்கள் அடையாளம் காண வேண்டியது முக்கியம்.

ஊரடங்கு விதிகள் விவகாரத்தில் சட்டத்திற்கு மேலாக எந்த ஒரு நபரும் இல்லை.

கொரோனாவால் ஏழை மக்கள் பாதிப்பு அடையவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம்.

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை மக்களுக்காக ரூ.1.75 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.31ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க மக்கள் தொகையை ஒப்பிடுகையில் இரண்டு மடங்கு மக்கள் இந்தியாவில் பலன் அடைந்துள்ளனர்.

ஊரடங்கு சமயத்தில் உணவு இல்லாமல் பசியால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

விவசாயிகளுக்கு சுமார் 18ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

நவம்பர் மாதம் வரை இலவசமாக ரேசன் பொருட்கள் வழங்கப்படும்.

சிறிய தவறுக்கு கூட இடங்கொடுக்க கூடாது: பிற உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் நிலைமை சீராகவே உள்ளது. சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளால் நிலைமை சீராக உள்ளது.

பிரதமர் முதல் சாமானியர் வரை அனைவருக்கும் விதிமுறைகள் ஒன்றுதான். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். விதிகளை யாரேனும் மீறுவதைப் பார்த்தால், அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் ஊக்கப்படுத்த முன்வர வேண்டும்.

விவசாயிகள் மற்றும் வரி செலுத்துபவர்கள் கொரோனா ஊரடங்கு சமயத்தில் நாட்டிற்கு பேருதவி செய்துள்ளனர்.

நவம்பர் வரை 80 கோடி மக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.
 

More News

என் கணவர் இருக்கும்போது கொரோனா என்னை என்ன செய்துவிடும்? கொரோனாவுக்கு பலியான சென்னை பெண்

சென்னையைச் சேர்ந்த அரியநாயகி என்ற பெண் கடந்த 1991ம் ஆண்டு அலெக்ஸ் என்பவரை சந்தித்து அவருடன் காதல் ஏற்பட்டதால் அதன்பின் மூன்று வருட காத்திருப்பிற்குப் பின் குடும்பத்தினர்களின் சம்மதத்துடன் திருமணம்

பாலியல் வழக்கில் நாகர்கோவில் காசி தந்தை கைது: சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை

பள்ளி மாணவிகள் முதல் குடும்ப பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்த நாகர்கோவில் காசி, சென்னையில் உள்ள பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின்

குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி: கொரோனா சிகிச்சைக்கு கைக் கொடுக்குமா???

தட்டம்மை மற்றும் ரூபெல்லா போன்ற தொற்றுகளுக்கு எதிராக குழந்தைகளுக்குப் பயன்படுத்தும் MMR தடுப்பூசி தற்போது கொரோனா நோய்

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல் துறையினர் மீது கொலைவழக்கு பதிவு செய்யலாம் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் காவல்துறை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

முத்தக்காட்சிகளை குழந்தைகள் பார்க்க அனுமதிக்க கூடாது: வனிதா விஜயகுமார்

கடந்த சில நாட்களுக்கு முன் பீட்டர்பால் என்பவரை நடிகை வனிதா திருமணம் செய்து கொண்டார் என்பதும், திருமணத்தின் போது மோதிரம் மாற்றிய பின்னர், இருவரும் லிப்கிஸ் அடித்த புகைப்படங்கள்