இசைஞானியுடன் ஒரு சந்திப்பு.. தமிழில் ட்வீட் போட்ட பிரதமர் மோடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இசைஞானி இளையராஜா சமீபத்தில் லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றிய நிலையில் அவருக்கு தமிழகத்திலிருந்து மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்தது என்பது தெரிந்தது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் இந்திய அளவில் பிரபல அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் சிம்பொனி இசையை வெற்றிகரமாக அரங்கேற்றி விட்டு நாடு திரும்பிய இசைஞானி இளையராஜா பிரதமர் மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இன்று சந்திப்பு குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடிஜியுடன் மறக்க முடியாத சந்திப்பு. இந்த சந்திப்பில் என்னுடைய சிம்பொனி உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பாராட்டு மற்றும் ஆதரவுக்கு பணிவுடன் நன்றி
இந்த நிலையில் இசைஞானி இளையராஜா சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தமிழில் அவர் கூறியிருப்பதாவது:
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.
A memorable meeting with Hon’ble PM Shri @narendramodi ji We spoke about many things, including my Symphony “Valiant”. Humbled by his appreciation and support. 🙏 @OneMercuri pic.twitter.com/caiP770y13
— Ilaiyaraaja (@ilaiyaraaja) March 18, 2025
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திரு இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
— Narendra Modi (@narendramodi) March 18, 2025
எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது… pic.twitter.com/WAsqFzEzpL
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments