கொரோனா விழிப்புணர்வு: சச்சின், பிவி சிந்து உள்பட 40 பிரபலங்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில் தீவிரமாக உள்ளன. இன்று காலை நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி அவர்கள் ’ஊரடங்கு உத்தரவை அனைவரும் சரியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் 130 கோடி இந்தியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொரோனாவுக்கு எதிரான போரை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சிலர் இன்னும் வெளியே நடமாடி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இதனையடுத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து முக்கிய விளையாட்டு பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முதல் கட்டமாக விளையாட்டு வீரர்கள் 40 பேர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த ஆலோசனையில் சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, பிவி சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

எனவே விரைவில் கொரோனா குறித்து விளையாட்டு பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோக்கள் வெளி வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

More News

அனைத்து தெருக்களும் மூடப்பட்டதால் சென்னை புதுப்பேட்டையில் பரபரப்பு!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு அதனை பெரும்பாலான மக்களும் கடைபிடித்து வருகின்றனர்

அடுப்பு பற்றவைக்கவே வசதியில்லை, விளக்கேற்றுவது எப்படி? 'மாஸ்டர்' பட பிரபலம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை 9 மணிக்கு நாட்டு மக்களிடம் பேசிய போது 'கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள்

கொரோனாவுக்கு எதிரான போர்: ரூ.1.25 கோடி கொடுத்த பிரபல நடிகர்

கொரோனாவுக்கு எதிராக நாடே போராடி கொண்டிருக்கும் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக திரையுலகை சேர்ந்த பலர் கோடிக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் அரசுக்கு உதவி

நான் கொரோனாவை விட மோசமானவன்: போலீசிடம் வாக்குவாதம் செய்த வாலிபர் கைது

சமீபத்தில் சிவகங்கையை சேர்ந்த வாலிபர் ஒருவர் போலீசாரிடம் 'கொரோனாவை என் கண் முன் காட்டு, முதலமைச்சரை என் முன்னால் வந்து நின்று நிற்கச்சொல்' என வீராவேசம்

கொரோனாவுக்கு பழந்தமிழ் வைத்தியம்!!! வாட்ஸ் அப்பில் பரவிவரும் தகவலை நம்பலாமா???

கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் முதற்கொண்டு அனைத்து சமூக வலைத் தளங்களிலும் கொரோனாவுக்கு மருந்து என்ற பெயரில், சில புத்தகத் தாள்கள் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது