கொரோனா பாதிப்புக்கு பின் திரையரங்கில் வெளியாகும் பிரபலத்தின் படம்

  • IndiaGlitz, [Saturday,October 10 2020]

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே

ஆனால் அதே நேரத்தில் செப்டம்பர் 1 முதல் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் தற்போது ஓரளவிற்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 15 முதல் திரையரங்குகளையும் ஒரு சில நிபந்தனைகளுடன் திறக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது

இதனை அடுத்து நாடு முழுவதிலும் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் வரும் 15ஆம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தயார் நிலையில் உள்ளனர். இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் திறந்தவுடன் நாடு முழுவதும் வெளியாகும் முதல் படமாக பிரதமர் நரேந்த மோடி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற திரைப்படம் வெளியாகவிருப்பதாக தகவல் தற்போது வெளிவந்துள்ளது

கொரோனா பாதிப்புக்கு பின் முதல் படமாக திரையரங்குகளில் ’பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தில் நரேந்திர மோடி கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரும் அஜித் நடித்த ‘விவேகம்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான விவேக் ஓபராய் நடித்துள்ளார் என்பதும் இந்த படம் ஏற்கனவே கடந்த ஆண்டு மே மாதம் ரிலீஸாகி நல்ல வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா… குதூகலிக்கும் அறிவிப்பு வெளியிட்ட பில்கேட்ஸ்!!!

மைக்ரோசாஃப்ட் நிறுவனங்களுக்குச் சொந்தக்காரரான பில்கேட்ஸ் தரப்பில் இருந்து ஒரு திடுக்கிடும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

6 மாசமா வீட்டுக்கே போகல… 700 கொரோனா உடல்களை அப்புறப்படுத்திய துப்புரவு தொழிலாளி…

கொரேனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு சொந்த உறவினர்களே பயப்படும்போது

பெரும்பேறு பெற்ற தமிழகம்… மறுக்கவும்… மறக்கவும் முடியாத முதல்வர் எடப்பாடி பழனிசாமியின்  10 சாதனைகள்!!!

மறைந்த முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்குப் பின் கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று விட்டன.

தீபாவளியும் இல்லை, பொங்கலும் இல்லை: 'அண்ணாத்த' ரிலீஸ் எப்போது?

ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த 'அண்ணாத்த' படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

கமல்-ரேகா கிஸ்ஸிங் காட்சியை கலாய்க்கின்றாரா பிக்பாஸ் சுரேஷ்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்ரவர்த்தி முதலில் அனிதாவிடம் 'நியூஸ் ரீடர்ஸ்கள் வணக்கம் சொல்லும் போது எச்சில் தெறிக்கும்' எனக் கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.