close
Choose your channels

சொந்தமா ஒரு கார்கூட வச்சிக்கல… பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு… வைரலாகும் தகவல்!!!

Thursday, October 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொந்தமா ஒரு கார்கூட வச்சிக்கல… பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு… வைரலாகும் தகவல்!!!

 

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது அமைச்சரவை சாகக்களுடன் சேர்ந்து தனது சொத்துகள், முதலீடுகள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்களை தானாக முன்வந்து அறிவித்து உள்ளார். அதன்படி கடந்த ஜுன் 30, 2020 ஆம் தேதி நிலவரப்படி அவருடைய சொத்து மதிப்பு ரூ 2.49 கோடி எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் சொத்து மதிப்பு குறித்த தகவலை பிரதமர் மோடி தாக்கல் செய்யும்போது அவரிடம் ரூ.2.49 கோடி நிகரச் சொத்து மதிப்பு இருந்ததாகக் கூறப்பட்டது. இந்த ஆண்டு அதைவிட கொஞ்சம் வளர்ச்சி அடைந்து அவருடைய சொத்து மதிப்பு ரூ.2.86 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல அமித்ஷாவின் சொத்து மதிப்பு ரூ.28.63 கோடி எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும் ஜுன் மாத இறுதியில் அவரிடம் கையிருப்பாக ரூ.31 ஆயிரத்து 450 சேமிப்பு இருந்ததாகவும் அவருடைய வங்கி கணக்கில் ரூ.3.38 லட்சம் இருந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்து உள்ளார். கடந்த ஆண்டு அவருடைய வங்கிக் கணக்கில் ரூ.4,143 மட்டுமே இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல கடந்த ஆண்டு காந்தி நகரில் உள்ள ஸ்டேட்பேங்க் வங்கிக் கிளையில் அவருடைய நிலைத்த வைப்புத்தொகை ரூ.1,27,81,574 ஆக இருந்தது. தற்போது அதன் மதிப்பு ரூ.1,60,28,039 ஆக உயர்ந்து உள்ளது என்பதையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டு காட்டியிருக்கிறார்.

அதைத்தவிர 45 கிராம் எடையுள்ள 4 தங்க மோதிரங்களை அவர் வைத்திருக்கிறார் எனவும் அதன் மதிப்பு தற்போது ரூ.1,51,875 எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் காந்தி நகர் பகுதியில் இருக்கும் வீடு மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் நிலத்தின் மதிப்பு ரூ.1.1 கோடியாக உள்ளது. இந்த அசையாக சொத்தின் நான்கு உரிமையாளர்களில் ஒருவராக மட்டுமே மோடி இருக்கிறார் என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. இதனால் கடன் ஏதுமற்றவராகவும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லாதவராகவும் மோடி இருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.