போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை: தலைவர்கள் கருத்து

  • IndiaGlitz, [Saturday,November 18 2017]

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தியது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக தொண்டர்கள் சோதனை நடந்தபோது வேதா இல்லம் முன் குவிந்து 'மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக, வருமான வரித்துறையினர் ஒழிக என்று கோஷம் போட்டனர். இந்த நிலையில் இந்த சோதனை குறித்து தலைவர்களின் ரியாக்சன் என்ன என்பது குறித்து தற்போது பார்ப்போம்

டிடிவி தினகரன்:  போயஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை ஜெயலலிதாவுக்கு செய்யப்படும் துரோகம். சோதனையின் பின்னணியில் முதலமைச்சர் பழனிசாமியும், பன்னீர்செல்வமும் உள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த் வீடு எங்களுக்கு கோவில், அவர் தங்கியிருந்த அறை கருவறை. போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்றுவோம் என்று சொல்லி தொண்டர்களையும் மக்களையும் தொடர்ந்து ஏமாற்றி வரும் எடப்பாடியின் துரோக அரசு, இந்த துரோக செயலுக்கு என்ன பதில் சொல்ல போகிறது? அ.தி.மு.க.வின் ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும் அவர்கள் இருவரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

வி.பி.கலைராஜன்: போயஸ் கார்டனில் நடந்த வருமான வரி சோதனைக்கு மாநில அரசே முழுக்காரணம். சோதனையைக் கண்டு அ.தி.மு.க-வின் உண்மைத் தொண்டார்கள் கொதித்து போயுள்ளனர்

தீபா: போயஸ் கார்டன் வீட்டில் சோதனை செய்ய என்னிடம் அனுமதி பெறாதது ஏன்? என் சகோதரர் தீபக்கிடமும் ரெய்டு குறித்து எந்த அனுமதியும் அதிகாரிகள் பெறவில்லை. ரெய்டு குறித்து  செய்தியைப் பார்த்துதான் இங்கே வந்துள்ளேன். போயஸ் இல்லம் குறித்து நான் வழக்கு தொடர்ந்துள்ளதால், எனக்கு ரெய்டு குறித்து தெரியபடுத்தியிருக்க வேண்டும். ரெய்டுக்கு யார் பொறுப்பு என்றெல்லாம் எனக்குத் தெரியாது. வேதா இல்லம் மற்றும் பூர்வீக சொத்து எங்களுக்குச் சொந்தமானது. அதை மீட்பது எனது கடமை. ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத்தான் தெரிகிறது'

மைத்ரேயன் எம்பி: காரணம் என்னவாக இருந்தாலும் ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் சோதனை என்பது வேதனை அளிக்கிறது; என்னை பொறுத்தவரை ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் ஒரு கோயில்

More News

21 ஆண்டுகளுக்கு பின் ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நேற்றிரவு அதிரடியாக வருமான வரித்துறை அதிகாரிகள் பத்து பேர் நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

சென்னையில் சன்னிலியோன்: பிரபல நடிகையுடன் நேரடி நிகழ்ச்சி

பாலிவுட்டின் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் சமீபத்தில் கேரளா வந்திருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகை, கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள்.

'நாச்சியார்' படத்தில் இடம்பெற்ற 'அந்த' வார்த்தை நீக்கப்படும். எஸ்.வி.சேகர்

சமீபத்தில் வெளியான இயக்குனர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசுவதாக இடம்பெறும் ஒரு வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்

என் வாழ்வில் இன்று முக்கிய நாள்: ஜிவி பிரகாஷ் பெருமிதம்

நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா இயக்கி வரும் 'நாச்சியார்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது