close
Choose your channels

மாமியாருடன் தகராறு: முகமது ஷமியின் மனைவி கைதால் பரபரப்பு

Monday, April 29, 2019 • தமிழ் Comments

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரும், பஞ்சாப் அணியின் முக்கிய வீரருமான முகமது ஷமியின் மனைவி ஹசின் உத்தரபிரதேச மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமது ஷமியின் மனைவி ஹசின், கடந்த சில மாதங்களுக்கு முன் கணவர் மீது பல திடுக்கிடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்தார். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த பிசிசிஐ, பின்னர் அவர் குற்றமற்றவர் என்று தெரிந்தவுடன் மீண்டும் அணியில் சேர்த்து கொண்டது. அதுமட்டுமின்றி அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியிலும் ஷமி இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஞாயிறு அன்று கணவரிடம் இருந்து பிரிந்து வாழும் ஹசின், திடீரென தனது மகளுடன் ஷமியின் வீட்டிற்கு சென்று ஷமியின் தாயார் மற்றும் சகோதரியுடன் வாக்குவாதம் செய்தார். மேலும் அத்துமீறி ஷமியின் வீட்டிற்குள்ளும் நுழைய முயன்றார். இதனையடுத்து ஷமியின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் உபி போலீசார் ஹசினை கைது செய்தனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz