'குக்கூ குக்கூ' பாடலில் கொரோனா விழிப்புணர்வு: காவல்துறையின் வித்தியாசமான முயற்சி

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, தடுப்பூசி போட்டுக் கொள்வது போன்ற விழிப்புணர்வுகளை மத்திய-மாநில அரசு ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் சந்தோஷ் நாராயணனின் சூப்பர் ஹிட் பாடலான ’குக்கு குக்கூ’ பாடலின் பாணியில் கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு போலீஸ்காரர்கள் மாஸ்க் அணிந்து நடனமாடி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.

அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும், கோவிட் எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் இந்த நேரத்தில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது முக்கியம் என்றும், அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து ஒருவரை ஒருவர் டச் செய்யாமல் இருக்கவேண்டும் என்றும் கைகளில் சானினிடைசர் மூலம் அடிக்கடி கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் இவையெல்லாம் செய்தால் நாம் கொரோனாவில் இருந்து தப்பிக்கலாம் என்றும் அந்த பாடல் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அனைவரும் கண்டிப்பாக கொரோனா வைரஸ் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் வளமான எதிர்காலத்திற்கு அரசுடன் துணை நில்லுங்கள் என்றும் அந்த பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளது. இந்த பாடல் தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆன்லைன் பேமண்ட்டுக்கு No… அட்மிஷன் போடாமலே உயிரைவிட்ட கொரோனா நோயாளி!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அஞ்சலி எனும் பெண்ணை அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்

கணவரின் உயிருக்காக அதிகாரி காலில் விழுந்து கதறும் பெண்… நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

இந்தியா முழுக்கவே கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறை,

ஆக்சிஜன் கேட்டு டிவிட்டரில் பதிவு செய்தவர் மீது கிரிமினல் வழக்குத் தொடுத்த உ.பி. அரசு!

உத்திரப்பிரதேசத்தில் தன் தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு டிவிட்டரில் பதிவிட்ட ஒருவர்

வாக்கு எண்ணிக்கையை நடத்த கூடாது… நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த புதிய தமிழகம் கட்சி!

நடைபெற்று முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாகக் குற்றம் சாட்டி மே 2 ஆம் தேதி நடக்கவிருக்கும்

'தல நீங்களும் ஓவியா ஆர்மியா? பிக்பாஸ் பாலாவின் டுவிட்டிற்கு குவியும் கமெண்ட்ஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவர் ஓவியா என்பதும் அந்த நிகழ்ச்சியில் அவர் மிகப்பெரிய புகழை பெற்றார் என்பதும் தெரிந்தது. ஓவியாவுக்கு தான் முதன்முதலாக பிக்பாஸ் ரசிகர்கள் ஆர்மி