நடிகர் கருணாஸ் மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு: ஏன் தெரியுமா?

  • IndiaGlitz, [Thursday,September 20 2018]

காமெடி நடிகரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ் மீது 6 பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியபோது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே தன்னை பார்த்து பயந்ததாகவும், அவருக்கு கிடைத்த முதல்வர் பதவி என்பது சின்னம்மா போட்ட பிச்சை என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதேபோல் ஒரு குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியின் பெயரை கூறி போலீஸ் உடையை கழட்டி வைத்துவிட்டு தன்னுடன் ஒத்தைக்கு ஒத்தை மோத வருமாறு சவால் விட்டார்.

மேலும் தன்னுடைய இனத்தை சேர்ந்தவர்கள் தன்னிடம் சொல்லிவிட்டு கொலை செய்தால் கூட அவர்களை காப்பாற்றுவேன் என்றும், தன்னுடைய சொத்துக்களை விற்றாவது அவர்களுடைய குடும்பத்திற்கு உதவி செய்வேன் என்றும் பேசினார்.

இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் கருணாஸ் பேசியதால் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சின்னத்திரை நடிகை நிலானி தற்கொலை முயற்சி! பெரும் பரபரப்பு

சின்னத்திரை நடிகை நிலானி கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்றுமுன் அவர் தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பஞ்சபாண்டவிகளுக்கு மத்தியில் பாலாஜி: கஸ்தூரியின் டுவீட்டுக்கு நெட்டிசன்கள் விளாசல்

பிக்பாஸ் வீட்டில் தற்போது யாஷிகா, ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகிய ஐந்து பெண்களும் ஒரே ஆண் போட்டியாளராகிய பாலாஜியும் உள்ளனர்

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு தயாரிப்பாளர் தாணுவின் தாராள உதவி

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் கூட்டமைப்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகம் சென்னை அண்ணா சாலையில் உள்ளது

சூர்யாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'என்.ஜி.கே. என்ற படத்திலும் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் படத்திலும் நடித்து வரும் நிலையில்

கள்ளம் கபடமில்லாத ஸ்மைல்: ஐஸூக்கு ஐஸ் வைத்த ரித்விகா

பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருடன் சண்டை போட்டு எல்லோரையும் பகைத்து கொண்டவர் என்றால் அவர் ஐஸ்வர்யாதான்.