நாகர்கோயில் காசியால் ஏமாந்த நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் யார்? தீவிர விசாரணை

  • IndiaGlitz, [Tuesday,May 05 2020]

பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான கல்லூரி பெண்களை ஏமாற்றிய கயவர்களின் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு குற்றம் நாகர்கோயிலும் நடந்துள்ளது. சிறு வயதில் இருந்தே வசதியுடன் வாழ்ந்த காசி, தன்னுடைய வசீகரமான தோற்றம், டிக்டாக்கில் பெண்ணியம் பேசுதல், ஆகியவற்றில் தான் பல பெண்கள் வீழ்ந்துள்ளனர்.

பள்ளி காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி அனுபவிப்பது, வீடியோ எடுப்பது பின் மிரட்டி பணம் பறிப்பது போன்ற வேலைகளில் காசி ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. காசிக்கு அரசியல் பிரபலங்கள் பலருடன் தொடர்பு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடைசியாக காசியிடம் ஏமாந்த பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரால் தான் தற்போது காசி கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

காசியை விசாரணை செய்ய மூன்று நாட்கள் அனுமதி அளித்துள்ளது நாகர்கோயில் மகிளா நீதிமன்றம். இந்த மூன்று நாட்களில் காசியால் ஏமாந்ததாக கூறப்படும் விஐபிக்களின் மகள்கள், நடிகரின் மகள், இன்ஸ்பெக்டரின் மகள் என லிஸ்ட்டில் உள்ள அனைவரும் பெயரும் வெளிவருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மேலும் காசிக்கு புதுவையிலும் ரிசார்ட் உள்ளிட்ட நிறைய சொத்துக்கள் இருப்பதாகவும், பல அரசியல் பிரபலங்கள் இருப்பதாகவும், அவர்கள் குறித்தும் விசாரணையில் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது. பொள்ளாச்சி வழக்கு போல் நீர்த்து போகாமல் இந்த வழக்கில் காசிக்கு உதவிய அரசியல் பிரபலங்கள் அனைவரையும் நீதியின்முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. காசியிடம் நடைபெறும் விசாரணையால் பல அரசியல் பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

எகிரும் தங்கத்தின் விலை!!! இந்நேரத்தில் தங்கத்தின் முதலீடு நல்லதா???

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அவர்களுடைய இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லையே: ஏ.ஆர்.ரஹ்மான் வருத்தம்

சமீபத்தில் பாலிவுட் திரையுலகின் இரண்டு முக்கிய நடிகர்களான இர்பான்கான் மற்றும் ரிஷிகபூர் ஆகிய இருவரும் அடுத்தடுத்த நாட்களில் உடல்நலக்கோளாறு காரணமாக மரணம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சியில் நேற்று வரை 15 பேர், இன்று ஒரே நாளில் 74 பேர்: கோயம்பேடு காரணமா?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று வரை 15 பேர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு அடைந்து இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் இம்மாவட்டத்தில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு

ஊரடங்கு முடியும் வரை மின் கட்டணம் வசூலிக்க கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதால் மின்சார கட்டணம் வசூலிப்பதை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது

சென்னை 'குடி' மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்: தமிழக அரசு அதிரடி

மூன்றாம் கட்ட ஊரடங்கில் மத்திய அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்த நிலையில் அந்த தளர்வுகளில் முக்கியமானதாக மதுபான கடைகளைத் திறக்கலாம் என்று அறிவித்திருந்தது