நான் யாரையும் ஏமாத்தலை, பெண்களாகத்தான் என்னிடம் வந்து விழுந்தாங்க: காசியின் பகீர் வாக்குமூலம்

  • IndiaGlitz, [Saturday,May 23 2020]

தான் யாரையும் ஏமாற்றவில்லை என்றும் என் உடம்பு பெண்களுக்கு பிடித்திருந்ததால் அவர்களாகவே என்னிடம் வந்து விழுந்தார்கள் என்றும் அதனால் நான் அவர்களுடன் ஜாலியாக இருந்தேன் என்றும் நாகர்கோவில் காசி விசாரணையில் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நாகர்கோவிலை சேர்ந்த காசி, பள்ளி கல்லூரி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் வரை நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் பெண் டாக்டர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் நாகர்கோவில் காசியை போலீசார் காவலில் எடுத்து விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக விசாரணையில் வாயை திறக்காத காசி, தற்போது மெல்ல மெல்ல பேச ஆரம்பித்து இருப்பதாகவும், அவருடைய லேப்டாப்பில் உள்ளவர்களை காட்டி அவர்கள் குறித்து விசாரித்தபோது சில விபரங்களை காசி கூறியதாகவும் தெரிகிறது

மேலும் பெண்கள் விவரம் குறித்து கேட்டதற்கு நிறைய பெண்கள் தன்னிடம் பழகியதாகவும், அதெல்லாம் லிஸ்ட் போட்டுக் கொடுக்க முடியாது என்று கூறியதாகவும் ஆனால் நானாக யாரையும் ஏமாற்றவில்லை என்றும் என்னுடைய உடம்பு அழகாக இருந்ததால் அவர்களாகவே வந்து ஜாலியாக இருந்தார்கள் என்றும் காசி விசாரணையில் கூறியுள்ளதாக கூறப்படுகிறது

மேலும் தனக்கு கொஞ்சம் பணம் தேவை என்பதால் அந்தப் பெண்களின் நட்பை பயன்படுத்திக் கொண்டதாகவும் எந்த பெண்ணையும் கல்யாணம் செய்து தான் ஏமாற்றவில்லை என்றும் காசி கூறி இருப்பதும், என் மீது புகார் அளித்த டாக்டர் பெண்ணையே கேட்டுப் பாருங்கள், நானா அவரை ஏமாற்றினேன்? என்று பதிலளித்தது இருப்பது போலீசாருக்கே அதிர்ச்சியாக இருந்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் காசியிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் முழு விசாரணை முடிந்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை போலீசார் எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

More News

'கார்த்திக் டயல் செய்த எண்': சிம்பு, கவுதம் மேனனின் புதிய வீடியோ வைரல்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

நிபந்தனைகளுடன் சலூன் கடைகள் திறக்க அனுமதி: வழக்கம்போல் சென்னை தவிர...

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கால் கடந்த இரண்டு மாதங்களாக சலூன் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில்

தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விழுந்து நொறுங்கிய பாகிஸ்தான் விமானம்!!!

பாகிஸ்தானின் தெற்கு பகுதியான கராச்சியில் பயணிகள் விமானம் ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் விழுந்து நொறுங்கியது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே முற்றிவரும் வரும் சர்ச்சை!!! தற்போதைய நிலவரம் என்ன???

கடந்த 18 ஆம் தேதி உலகச் சுகாதார அமைப்பின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடந்து முடிந்தது

திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி எப்போது? அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் திரைப்பட படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதேபோல் திரையரங்குகளும் இரண்டு மாதங்களுக்கு மேல் மூடப்பட்டுள்ளன