ஆளுனர் மாளிகையை சுற்றி திடீர் போலீஸ் குவிப்பு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, கூவத்தூரில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவருடன் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் எம்.எல்.ஏக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சசிகலா எம்.எல்.ஏக்களுடன் சென்னை வந்து ஆளுனரை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ஆளுனரை சந்திக்க சசிகலா தரப்பு நேரம் கேட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில் ஆளுனர் சசிகலாவை சந்திப்பாரா? என்ற கேள்விக்குறியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் சற்று முன்னர் கிண்டி ஆளுனர் மாளிகையை சுற்றி திடீரென அதிகளவில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

More News

அதிமுகவை உடைக்க சதி நடக்கிறது. விஜயசாந்தி பேட்டி

பிரபல நடிகையும் தெலுங்கு மாநிலத்தின் அரசியல்வாதியுமான நடிகை விஜயசாந்தி தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழ்நிலை குறித்து ஐதராபத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஓபிஎஸ் அணியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார்?

தமிழக அரசியல் சதுரங்க விளையாட்டு உச்சகட்டத்தில் உள்ள நிலையில் முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் கை ஓங்கி வருகிறது என்பது ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் இருந்து வரும் செய்திகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு? புதிய தகவல்

தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்காத நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சசிகலா அணிக்கு 130 எம்.எல்.ஏக்களும், முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு 4 எம்.எல்.ஏக்களும் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.

சென்னை விடுதிகள் திடீர் சோதனை. கமிஷனர் ஜார்ஜ் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து குழப்ப நிலை நீடித்து வரும் நிலையில் இந்த நிலையை பயன்படுத்தி சமூக விரோதிகள் வன்முறையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக காவல்துறையினர்களுக்கு ரகசிய தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி எதிரொலி. கூவத்தூர் செல்கிறார் சசிகலா

கூவத்தூரில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.