கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்திற்கு அனுமதி மறுப்பு: காவல்துறை கூறிய காரணம்!

  • IndiaGlitz, [Friday,October 29 2021]

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்புக்கு சென்னை காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அருங்காட்சியகத்தில் அக்டோபர் 27 மற்றும் 28 தேதிகளில் படப்பிடிப்பு நடத்தவும் அதற்கு முந்தைய இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கான முன் வேலைகள் நடத்தவும் அனுமதி கோரி கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் சென்னை காவல் துறைக்கு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த விண்ணப்பத்திற்கு அனுமதி மறுத்து காவல் துறை கடிதம் அனுப்பி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக சென்னை எழும்பூர் காவல்துறை அருங்காட்சியத்தில் எந்தவித படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்று கூறி ‘விக்ரம்’ படத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ‘விக்ரம்’ படக்குழுவினர் மாற்று இடத்தில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நியூசிலாந்து அணிக்கு இவ்வளவு திறமையா? இப்பவே பீதியை கிளப்பும் நெட்டிசன்ஸ்!

டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிவரும் இந்தியா தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டு படுதோல்வி

ஆட்டத்தைத் துவங்கிவிட்ட மெண்டர் தோனி… பிளேயிங் 11-இல் மாற்றமா?

பிளேயிங் 11-இல் இருந்து ஹர்திக் பாண்டியாவை தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷல்துல் தாக்கூரை சேர்க்க வேண்டும் என்ற குரல்

பெயர் மாற்றப்பட்ட “பேஸ்புக்“… CEO அறிவிப்பு!

சமூகவலைத்தள நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும்

ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்த ஓட்டத்தை

கல்வி முறையே தவறாக இருக்கிறது? விரக்தியில் மாணவர் எடுத்து விபரீத முடிவு!

கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர், கல்வி முறையே தவறாக இருக்கிறது, அதில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்