எஸ்பிபி மறைவு: அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்: திரையிசை உலகில் தனக்கென தனி இடம் பெற்ற திரு.S.P.பாலசுப்ரமணியம் அவர்களின் மறைவு சொல்லொணாத் துயரத்தை அளிக்கிறது. #SPBalasubramaniam அவர்கள் மறைந்தாலும் அவரது கானக்குரல் பாடல்கள் என்றுமே மறையாது ஒலித்துக் கொண்டே இருக்கும். அவரது பெருமைகளை நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.

திமுக தலைவர் முக ஸ்டாலின்: பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களின் மறைவை கோடிக்கணக்கான ரசிகர்கள் தம் சொந்தக் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பாகவே கருதுகிறோம். மன அழுத்தத்துக்கு இயற்கையான மாமருந்து அவர்! தம்பி சரணுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதல்!
இனிய குரலால் என்றென்றும் உயிர்த்திருப்பார் எஸ்.பி.பி.

அமைச்சர் வேலுமணி: ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களுக்கு தனது கந்தர்வ குரலால் உயிரூட்டி பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றவர் திரைப்பட பின்னணி பாடகர் திரு. எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள். அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய இசையுலகிற்கே பேரிழப்பாகும்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்: பின்னணி பாடகர் திரு SP. பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு செய்தியை அறிந்தவுடன் மிகுந்த துயரம் அடைந்தேன். இசை உலகிற்கு இவரது மறைவு மாபெரும் இழப்பு

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: எஸ்பிபி அவர்களை மண்ணுலகில் பாடியது போதும் இனிமேல் விண்ணுலகில் பாட வாருங்கள் என்று விண்ணுலகம் அழைத்துக்கொண்டதோ?

டிடிவி தினகரன்: தன் வசீகரமிக்க குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி

More News

ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்: கமல்ஹாசன்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் சற்று முன் காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழத்திற்கு புதிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்… முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை!!!

பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கு தமிழகத்தில் புதிய ஆராய்ச்சி நிறுவனத்தை ஏற்படுத்த வேண்டும்

எஸ்பிபி மரணம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார்.

பாடகர் எஸ்பிபி காலமானார்: திரையுலகினர் இரங்கல்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உடல்நிலை நேற்றிரவு முதல் கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்று முன் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

பள்ளி பாடப் புத்தகங்களுக்கும் வரி விதிப்பா??? வைரல் தகவலுக்கு மத்திய அரசு விளக்கம்!!!

பள்ளிப் பாடப் புத்தகங்களுக்கும் மத்திய அரசு புதிய வரி விதிப்பைக் கொண்டு வரப்போவதாகச் ஒரு அறிக்கை கடந்த தினங்களாக சமூக வலைத்தளங்களில்